ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என அனைத்து வேடங்களுக்கும் பொருத்தமாக இருக்கும் ஒரு சில நடிகர்களில் துரை சுதாகரும் ஒருவர். ‘களவாணி 2’ படத்தின் மூலம் வில்லனாக அறியப்பட்டவர், கதையின் நாயகனாக மட்டும் இன்றி சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பாராட்டு பெற்றிருக்கிறார்.
தஞ்சை மாவட்ட தொழிலதிபரான துரை சுதாகர், பல்வேறு சமூகப் பணிகள் மற்றும் பொது சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால், அவரை மக்கள் அன்பாக பப்ளிக் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்ப்பதை செய்யும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தமிழ் திரையுலகை சார்ந்தவர்களுக்கும் பல உதவிகள் செய்து வருவதால், கோடம்பாக்கத்தில் இவருக்கு என்று தனி மரியாதை உண்டு.
தற்போது பல பெரிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் துரை சுதாகர், சமீபத்தில் நடைபெற்ற அன்னை தெரசா 115 வது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், தனது சினிமா மற்றும் பொது சேவை பயணங்கள் தொடரும், என்று தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் உள்ள அன்னை மதர் தெரசா அறக்கட்டளை, மதர் தெரசாவின் 115 வது பிறந்தநளை கொண்டாடியதோடு, 77 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது.
மதர் தெரசா அன்பு இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அறக்கட்டளை தலைவர் சவரி முத்து தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், தொழிலதிபருமான துரை சுதாகர் மற்றும் மாநகராட்சி துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம் பூபதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவத்களுக்கு உதவித் தொகை வழஙகினார்கள்.
77 மாணவர்களுக்கு ரூ.8.45 லட்சம் உதவித் தொகை வழஙகப்பட்டது. மேலும், பொதுத்தேர்வில் 90 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்த 10 பேருக்கு தலா ரூ.1000-மும், நலிவுற்ற 9 பெண்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள அரவை எந்திரம், தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நடிகர் துரை சுதாகர், பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வந்தாலும், தன்னுடைய பொது சேவை எப்போதும் தொடரும் என்பதோடு, நலிவடைந்தவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் தனது வருமானத்தின் ஒரு பகுதியை வழங்குவது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, என்று தெரிவித்தார்.
மேலும், தொழிலதிபரகா இருந்தாலும், சினிமா மற்றும் பொதுசேவையில் தனது பங்களிப்பு தொடரும் என்றார். மேலும், தற்போது பல முக்கியமான நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும், அது பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களில் ‘அந்த 7 நாட்கள்’ ஒன்று...
உள்ளூர் சினிமாவில் தொடங்கி, உலகளவிலான சினிமா வரை வெகுஜன மக்களை ஈர்க்கும் மிக முக்கியமான ஜானர் திரில்லர் மற்றும் திகில் மட்டுமே...
’மேதகு - பாகம் 1’ மற்றும் ‘சல்லியர்கள்’ படங்களை இயக்கிய இயக்குநர் தி...