நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’. டொம்னிக் அருண் இயக்கியிருக்கும் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
மலையாளம் மட்டும் இன்றி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்து தற்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வசூல் ரீதியாக மட்டும் இன்றி விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து படக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ரசிகர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை ‘லோகா - அத்தியாயம் 1’ படக்குழு சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பேசுகையில், “லோகாவிற்கு இந்தளவு பாராட்டு, வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. நீங்கள் ஆதரவு தந்தததால் தான், இந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது. இப்படத்திற்காக நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்பாவிடம் ஆக்சன் பண்ண போகிறேன், என்றவுடன் நீயா ஆக்சன் பண்ணபோறே? கால் கையெல்லாம் ஒழுங்காக பார்த்துக்கொள் என்றார். படம் 100 கோடி வசூலித்துள்ளது அதற்கு, நான் மட்டுமே காரணமில்லை. மொத்த குழுவின் உழைப்பு தான் காரணம். நான் மட்டும் கிரடிட் எடுத்துக்கொள்ள முடியாது. இப்படத்திற்கு இவ்வளவு பாராட்டுக்களை தந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் பேசுகையில், “நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு டீச்சராக பசங்களை கூட்டி வந்துள்ளேன். நான் எந்த மொழியில் படம் செய்தாலும், இங்கு படம் பிரஸ்க்கு போட்டால், படம் நன்றாக இருந்தால், பிரஸ் உடனே பாராட்டுவார்கள், கொண்டாடுவார்கள் அவர்களுக்கு நன்றி. நாங்கள் இதை கேரளா அளவில் சின்னதாகத் தான் ஆரம்பித்தோம் இப்போது எல்லா இடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதில் உழைத்த எல்லோரும் அவர்கள் படம் போல உழைத்தார்கள், இந்த வெற்றி அவர்களுக்கானது தான். கல்யாணியை தவிர இந்தப்படத்திற்கு வேறு யாருமே செட் ஆகமாட்டார்கள் என்ற அளவிற்கு அவர் பொருத்தமாக இருந்தார். கதை சொன்ன மறுநாளே அவர் டிரெய்னிங் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக செய்துள்ளார். நேரடித்தமிழ்படம் போல இப்படத்தை டப்பிங் செய்து தந்த பாலா சாருக்கு நன்றி. இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை. இப்படத்தை ஐந்து பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன், இந்த அளவு கிரேஸ் பார்க்கவில்லை. அதற்கான மரியாதை உடன் அடுத்தடுத்த பாகங்களை எடுப்போம். லோகா மாதிரி இன்னும் அடுத்தடுத்து படங்கள் தருவோம். என் பேனரில் நான் மட்டுமே நடிக்க வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை, எனக்கு சினிமா அவ்வளவு பிடிக்கும், என் பேனரில் மற்றவர்கள் நடிக்கும் படங்களும் தயாரித்து வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள். இப்படத்தை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் சந்து சலீம் குமார் பேசுகையில், “என்ன பேசுவது என்றே தெரியவில்லை. முதலில் நண்பர் துல்கர் சல்மானுக்கு நன்றி. நண்பர் இயக்குநர் டோமினிக் அருணுக்கு நன்றி. கல்யாணி , நெஸ்லென் என உடன் நடித்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. மம்மூட்டி சார் ஃபாரெவர் பெஸ்ட் ஃபிரண்ட் அவருக்கும் நன்றி. இந்தப்படத்தை இந்த அளவு எடுத்துச் சென்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
டப்பிங் பார்வையாளர் RB பாலா பேசுகையில், “இயக்குநர் டோமினிக் சாருக்கு நன்றி. வழக்கமாக மற்ற மொழி படங்களை வாய்ஸ் டப்பிங் செய்யும் போது சவாலாக இருக்கும். நான் 30 வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். இயக்குநர் டோமினிக் வித்தியாசமானவர், முதலில் செய்து தந்த டப்பிங்கை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவர் இன்னும் கொஞ்சம் பேஸ் வேணும் மணிரத்னம் ஸ்டைல் வேணும் என்றார். முழுமையாக ரீ டப்பிங் செய்து தந்தேன் அவருக்கு பிடித்திருந்தது. துல்கருடன் முன்னரே வேலை செய்துள்ளேன், ஒரு முறை தான் டயாலாக் கேட்பார், ஒரு டேக்கில் முடித்து விடுவார். என்னை அசரவைத்த நடிகர். இந்தப்படத்தில் ஆச்சரியப்பட வைத்தது, கேமராமேன் தான், ஹாலிவுட் தரத்துக்கு செய்துள்ளார். கல்யாணியுடன் மரைக்காயர் படத்தில் வேலை பார்த்துள்ளேன், இந்தப்படத்தில் மிரட்டியுள்ளார். நஸ்லென் சின்ன சின்ன டயாலாக்குகளிலும் கச்சிதமாக செய்வார். அவர் கண்ணைக்காட்டினாலே அத்தனை உணர்வுகள் இருக்கும். எனக்கு சமீபத்தில் அதிக திருப்தி தந்த படம் இது. எல்லோருக்கும் நன்றி. முக்கியமாக இயக்குநருக்கு நன்றி.” என்றார்.
எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் பேசுகையில், “சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. நாங்கள் நாங்களே பார்த்து சந்தோசப்படும் படத்தை செய்ய விரும்பினோம், இப்போது எல்லோரும் அந்தப்படத்தைக் கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் டோமினிக் உடன் பல காலமாக வேலை செய்து வருகிறேன். அவருடன் இணைந்து எழுதுவது மிக சந்தோசமான அனுபவம். இந்த ஐடியா டோமினிக் தான் சொன்னார். நம் மண்ணில் சூப்பர்ஹீரோ செட் செய்வதை பற்றி மிக உற்சாகமாக பேசுவார். அவர் பார்வையை புரிந்து கொண்டு, எல்லோரும் உழைத்தார்கள். அவருக்கு ஆதரவு தந்த தயாரிப்பு தரப்புக்கு நன்றி. இப்போது நாங்கள் அடுத்த பாகத்திற்கு இன்னும் சிறப்பாக எழுத ஆரம்பித்துள்ளோம். அந்தப்படமும் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் அருண் குரியன் பேசுகையில், “மீடியா நண்பர்களுக்கு நன்றி. லோகா படத்தை கொண்டாடுவதற்கு நன்றி. இது என் மனதுக்கு நெருக்கமான படம். எங்களுக்கு இப்படம் மிகப்பெரிய பயணம். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லோரிடமும் பாராட்டுக்களை பெறுவதை பார்க்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.
ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி பேசுகையில், “சென்னை என் இரண்டாம் வீடு. இங்கு தான் விசுவல் கம்மியூனிகேசன் படித்தேன். இப்போது மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. டோமினிக் ஒரு சின்ன ஐடியாவாக, ஒரு இண்டிபெண்டண்ட் படமாக தான் சொன்னார். அது வளர்ந்து வளர்ந்து இப்போது பிரம்மாண்டமாக வந்துள்ளது. அதை எல்லோரும் சேர்ந்து டெவலப் செய்து உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. இன்னும் இந்தப்படத்தை அதிகமான பேருக்கு எடுத்துச்செல்லுங்கள் நன்றி.” என்றார்.
Wayfarer Films சார்பில் அனூப் குமார் பேசுகையில், “இது AGS உடன் எங்களின் இரண்டாம் படம், இப்படத்தை பெரிய அளவில் எடுத்துச் சென்றதற்கு நன்றி. எல்லோரும் படத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சி. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் பார்க்காதவர்கள் எல்லோரும் படத்தை திரையரங்கில் பாருங்கள் நன்றி.” என்றார்.
ஏஜிஎஸ் சார்பில் ஐஸ்வர்யா பேசுகையில், “லோகா என்னுடைய பெஸ்ட் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் படம். டிரெய்லர் பார்த்தவுடன் இப்படத்தை வெளியீடு செய்வது என முடிவு செய்து விட்டோம். துல்கர் சல்மான் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி. இரண்டாம் பாகமும் ரெடியாகி வருகிறது. கல்யாணி படத்தில் கலக்கி விட்டார். எங்கள் நிறுவனம் மூலம் இன்னும் நல்ல படைப்புகள் தருவோம் நன்றி. இப்படத்தின் அடுத்த பாகங்களும் வரும் உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி.” என்றார்.
இயக்குநர் டோமினிக் அருண் (Dominic Arun) பேசுகையில், “இந்தப் பயணம் மிக நீண்ட, இனிமையான பயணம். உங்களுடன் எங்கள் படத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த பெருமையாக இருக்கிறது. எங்கள் படத்தைப் பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை கொண்டாடி வரும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நாயகன் நஸ்லென் பேசுகையில், “நன்றி, எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை, அந்தளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் லைஃபில் என்னென்னவோ நடக்கிறது, நான் நினைத்து பார்க்காததெல்லாம் நடக்கிறது. காலையில் சூர்யா சார், ஜோதிகா மேடம் போன் செய்து பாராட்டினார்கள். பலரும் பாராட்டி வருகிறார்கள் எல்லோருக்கும் நன்றி. எங்கள் படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.” என்றார்.
பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பாக வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில், அனுராக் காஷ்யப் வழங்கும் படம் ’பேட் கேர்ள்’...