ரிச் மூவிஸ் மற்றும் டி.எஸ்.கே மூவிஸ் சார்பில், தாஸ் சடைக்காரன், பி.மணவாளன் தயாரிப்பில், தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாகரீகப் பயணம்’. விவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை, பரணி ஸ்டுடியோவில் சமீபத்தில் விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தயாரிப்பாளர்கள் பி.மணவாளன், ஏ.செந்தில், புதுவை எம்.ஜாகீர் உசேன், இயக்குநர் ராதா பாரதி, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம், தயாரிப்பாளர் ஈகை கருணாகரன், இசையமைப்பாளர் திவாகர், காண்டியப்பன், அன்னகொடி கண்ணன், வர்ணிகா, முபாரக் அலி, ரஜினிகாந்த் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜாகிர் உசேன் பேசுகையில், “இன்னும் 25 வருடங்கள் பிறகு எல்லார் வீட்டிலும் அனைத்து பொருட்களும் இருக்கும், ஆனால் அரிசி இருக்காது , ஏனென்றால் விவசாயம் அழிந்து விடும் நிலையில் உள்ளது. விவசாயத்தை சார்ந்த திரைப்படம் எடுக்கலாம் என்று இயக்குநர் தாஸ் சடைக்காரன் என்னிடம் கூறினார், ஆதலால் நாங்கள் இருவரும் சேர்ந்து இத்திரைப்படம் எடுத்துள்ளோம்.” என்றார்.
இயக்குநர் தாஸ் சடைக்காரன் பேசுகையில், “இப்படம் 40-நாட்கள் கடின உழைப்பில் எடுத்துள்ளோம்,மக்கள் அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றும், வந்திருந்த அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம் பேசுகையில், ”குழந்தைகளை வேலைக்கு அமர்த்தி சிலர் வருவாய் காண்கிறார்கள், கர்நாடகவில் இன்று வரை தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை, அன்றைய திரைப்படப்பிடிப்பில் எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவே இந்த நிலை மாற வேண்டும்.” என்றவர், இளைஞர்கள் யாவரும் மது அருந்தி உடலை வருத்திக்கவேண்டாம், உடல் தான் உங்கள் சொத்து எனவே உடலை பாதுகாத்து கொள்ளுங்கள், என்று கூறி தனது பாணியில் “தமிழ் வாழ்க” என்று உறக்கமிட்டு உரையை முடித்தார்.
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...
மு. மாறன் இயக்கத்தில், ஜெ.டி...
நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...