Latest News :

காசியில் ‘கலகலப்பு 2’ குழுவினர்!
Monday October-23 2017

கிரி, ரெண்டு, தலைநகரம், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை - 2, ஐந்தாம் படை மற்றும் மீசைய முறுக்கு ஆகிய வெற்றி படங்களை தயாரித்த குஷ்பு சுந்தரின் அவ்னி சினி மேக்ஸ் தற்போது கலகலப்பு -2 படத்தை தயாரித்து வருகிறது.

 

இப்படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று வந்தது. 

 

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று காசியில் தொடங்கியுள்ளது. இதனையடுத்து இந்தூர், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று டிசம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

கலகலப்பு - 2 படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன்  ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

 

2012 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு.. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது. 

 

தற்போது இரண்டாம் பாகத்தில் இணைந்திருக்கும் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

வேங்கட்ராகவன் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு யு.கே.எஸ் ஒளிப்பதிவு செய்ய, பத்ரி வசனம் எழுதுகிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, மோகன்ராஜ் பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். பொன்ராஜ் கலைத்துறையை கவனிக்க, தினேஷ் சண்டைப்பயிற்சி மேற்கொள்ள, ஷோபி மற்றும் பிருந்தா ஆகியோர் நடனம் வடிவமைக்கின்றனர். 

Related News

1065

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery