Latest News :

பூஜையுடன் தொடங்கிய ‘காட்ஸ்ஜில்லா’ திரைப்பட படப்பிடிப்பு
Monday September-15 2025

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’. புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு ரோம்-காம் கதையாகும். இப்படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் வெளியான ‘சரண்டர்’ திரைப்படம் மூலம் பாராட்டு பெற்ற தர்ஷன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அலிஷா மிரானி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், KPY வினோத், பிளாக் பாண்டி, PGS ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

 

மோகன் குரு செல்வா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னை, பிரசாத் லேபில் தொடங்கியது. இதில், தயாரிப்பாளர்கள் கலைப்புலி ஜி.சேகரன், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் விஜய், சசி, பாண்டிராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

ரோம்-காம், புராணக் கற்பனையும், நகைச்சுவையும், காதலையும் ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதை சொல்லலாக இருக்கும். காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவரின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் மையக்கரு என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 

சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற ’பிளாக்மெயில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தனஞ்ஜெயன் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இந்த ‘காட்ஸ்ஜில்லா’ படத்தை தயாரிப்பதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Godsjilla

 

சிவராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா இசையமைக்கிறார். அரவிந்த் பி.ஆனந்த் படத்தொகுப்பு செய்ய, செளரப் கேசவ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். தனித்துவமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற இயக்குநர் மோகன் குருசெல்வா, பொழுதுபோக்கும் உணர்ச்சியும் கலந்த திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

 

வானுலக கற்பனைக் காட்சிகளும், புவியுலக நிறமிகு காட்சிகளும், ஆன்மீக இசையும், தத்துவம் கலந்த நகைச்சுவையும் இணைந்து, ’காட்ஸ்ஜில்லா’ இன்றைய இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் விதமாகவும், குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.இந்த பூஜையுடன் முதன்மை படப்பிடிப்பு துவங்கியுள்ளதோடு, ’காட்ஸ்ஜில்லா’ புராணம், கற்பனை, நவீன காதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதுமையான திரை அனுபவமாக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Related News

10658

இளமை துள்ளும் காதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சரீரம்’!
Monday September-15 2025

ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

Recent Gallery