தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பதவி வகிக்கும் நடிகர் விஷாலின் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வரும் நடிகர் விஷால், இந்நிறுவனத்தின் மூலம் சமீபத்தில் தயாரித்த படம் ‘துப்பறிவாளன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்படு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனையின் போது, நிறுவனத்தை சேர்ந்த விஷால் மற்றும் மேலாளர்கள் யாரும் அங்கு இல்லை.
ஜி.எஸ்.டி-க்கு எதிரான வசனம் இடம்பெற்ற விஜயின் மெர்சல் படத்திற்கு பிஜேபி எதிர்ப்பு தெரிவித்ததற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவரது அலுவலகத்தில் ஜிஎஸ்டி வரியை ஒழுங்காக செலுத்துகிறார்களா? என்பது குறித்து அறிய நடத்தப்படும் இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...