Latest News :

கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Thursday September-25 2025

கே.ஆர்.ஜி.கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் தொடங்கியது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

 

தொடர்ந்து தனது நிறுவனத்தின் மூலம், பல திறமையாளர்களுக்கு வாய்பளித்து, வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 5வது திரைப்படமான இப்படம் மிகப் பிரமாண்டமான பொருட்ச் செலவில் தயாரிக்கப்படுகிறது.

 

மேலும், இதற்கு முன்னதாக பிரபுதேவா, வடிவேலு, யுவன் சங்கர் ராஜா கூட்டணியை அறிவித்து இந்த நிறுவனம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

படம் குறித்த விரிவான அறிவிப்புகள், கதாநாயகி, முக்கிய நடிகர்கள் பட்டியல், தொழில்நுட்பக் குழுவின் முழுமையான விவரங்கள் மற்றும் கதை தொடர்பான சுவாரஸ்யங்கள் விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Related News

10676

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery