Latest News :

நெட்ஃபிலிக்ஸில் வெளியாக உள்ள ’தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடரின் டிரைலர் வெளியானது
Thursday September-25 2025

ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்'. இந்தக் கதைக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. 

 

விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமே! ஆனால், அந்த விளையாட்டே உங்களுக்கு வினையாக மாறினால்? அக்டோபர் 2 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகும் 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்' தொடரின் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.  உங்கள் விர்ச்சுவல் உலகம் நிஜ வாழ்க்கையை சந்தித்தால் என்ன நடக்கும் என்பதை ரகசியங்கள் மற்றும் உண்மைக்கு நெருக்கமாக பேசவுள்ளது. 

 

'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்' தமிழ் த்ரில்லர் சீரிஸூக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் இணைந்துள்ளது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில், தீப்தி கோவிந்தராஜன் திரைக்கதை எழுதியிருக்கிறார். அவருடன் இணைந்து செல்வா மற்றும் கார்த்திக் பாலாவும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.  நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களிலும் சாந்தினி, ஷ்யாமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சந்த், தீரஜ் மற்றும் ஹேமா ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். விர்ச்சுவல் உலகம் உண்மையான உலகத்தை சந்திக்கும்போது குடும்பம், உறவுகளில் எப்படி நம்பிக்கை இழக்க நேரிடுகிறது என்பதை இந்த தமிழ் த்ரில்லர் பேசுகிறது.  

 

இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா பகிர்ந்து கொண்டதாவது, "இந்தக் கதை வெறும் த்ரில்லர் மட்டுமல்ல! இது நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பாகும். த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இதில் குடும்பம் மற்றும் உறவுகள் பற்றியும் பேசியுள்ளோம். தற்போது விர்ச்சுவல் உலகம் வெறும் விர்ச்சுவல் உலகமாக மட்டும் இருப்பதில்லை. அது நம் வாழ்க்கையை சந்திக்கும்போது நிகழும் விளைவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.  என்னுடைய முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்டுடன் இணைந்து பணியாற்றுவது எங்கள் படைப்புக்கு எல்லையற்ற சுதந்திரம் கொடுத்தது.  பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்த்து அவர்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்" என்றார். 

 

தொடர் குறித்து நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் பகிர்ந்து கொண்டதாவது, "சுதந்திரமான கேமிங் டெவலப்பர் பெண் கதாபாத்திரத்தில் நடித்துப்பது எனக்கு புது அனுபவம். த்ரில்லர் ஜானரில் அமைக்கப்பட்ட என் கதாபாத்திரம் எனக்கே எதிராக திரும்பும்போது அவளால் தப்ப முடியவில்லை. ரியாலிட்டி அவளுக்கு சவாலானதாக உள்ளது. ஒவ்வொரு ஃபிரேமிலும் தீவிரம், ஆழத்தைக் கொண்டு வந்த இயக்குநர் ராஜேஷூடன் இணைந்து பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். நெட்ஃபிலிக்ஸ் உடன் இணைந்ததன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைய முடியும்" என்றார்.  

 

அவசரம், பயம், மனிதத்தன்மை, பதட்டம் என அனைத்து உணர்வுகளும் டிரெய்லரில் உள்ளது. கேமில் ஒவ்வொரு க்ளிக்கும் உங்கள் சாய்ஸ். ஒவ்வொரு மாஸ்க்கும் உண்மையை மறைத்துள்ளது. ஒவ்வொரு உண்மையும் கேமை மாற்றும். இந்த கேம் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களா என்பதில்லை, நீங்கள் உருவாக்கிய உலகில் உங்களால் வாழ முடிகிறதா என்பதைப் பற்றியது! 

 

நெட்ஃபிலிக்ஸில் அக்டோபர் 2 அன்று 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்' பாருங்கள்!

Related News

10678

’இரவின் விழிகள்’ பட இயக்குநரை புகழ்ந்து தள்ளிய கதாநாயகி!
Thursday September-25 2025

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’...

சர்வதேச விருது வென்ற ‘ஒரு கடல் இரு கரை’!
Thursday September-25 2025

தமிழ் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலைப் பற்றியும் செய்திகள் வெளியான வேகத்தில் மறைந்து போனது...

தபால் துறை அஞ்சல் அட்டைகள் மூலம் ’காந்தாரா’ படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!
Thursday September-25 2025

இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது...

Recent Gallery