பா.ஜ.க-வின் பலமான எதிர்ப்பை திரையுலகினரின் ஆதரவால் தவுடு பொடியாக்கிய விஜய், இந்திய அளவில் தனது பெயரை ஒலிக்கச் செய்திருப்பதால், அவரது ரசிகர்கள் படு உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், அந்த உற்சாகம் அனைத்தும் மெர்சல் படத்தை கமல்ஹாசன் பார்ப்பதுவரை மட்டுமே. அவர் படத்தை பார்த்த பிறகு விஜய் ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளார்கள்.
அதற்கு காரணம், கமலின் உள்குத்து தான். மெர்சல் படம் அபூர்வ சகோதர்கள் படத்தின் காப்பி என்று இணையத்தில் சில பதிவிட்டு வரும் நிலை அதை உறுதிப்படுத்தும் வகையில், மெர்சல் குழுவினருடன் தனது அலுவலகத்தில் அப்படத்தை பார்த்த கமல்ஹாசன், படம் முடிந்த பிறகு படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அபூர்வ சகோதர்கள் போஸ்டர் புன்பக்கம் வைத்தது போல அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது தான் தற்போது விஜய் ரசிகர்களின் கவலைக்கு காரணமாக உள்ளது.
புகைப்படம் எடுத்த கமல்ஹாசன், அபூர்வ சகோதரர்கள் போஸ்டரை கட் செய்துவிட்டாவது அந்த புகைப்படத்தை எடுக்க சொல்லியிருக்கலாம். ஆனால், போஸ்டர் பளிச்சென்று தெரியும் விதத்தில் புகைப்படம் எடுத்து விஜய் உள்ளிட்ட மெர்சல் படக்குழுவினரை மறைமுகமாக அசிங்கப்படுத்தியுள்ளார்.
கமல்ஹாசனின் இத்தக செயலை சுட்டிக்காட்டி அஜித் ரசிகர்களும், நெட்டிசன்களும் விஜய்க்கும் இயக்குநர் அட்லிக்கும் எதிராக மீம்ஸ்களை வெளியிட்டு வருவதால், விஜய் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியிருக்கிறார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...