Latest News :

அந்தப் படம் பார்த்தது என் வாழ்க்கையை மாற்றியது! - ஜாரெட் லெட்டோ
Tuesday September-30 2025

'டிரான்: ஏரஸ்' படத்தில் ஜாரெட் லெட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது மறக்க முடியாத பயணமாக ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் இணைந்து பணியாற்றியதை சொல்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக நேரம் செலவழித்ததையும், 1982 ஆம் ஆண்டு கல்ட் கிளாசிக் படத்தில் கெவின் ஃபிளினை திரையில் கொண்டு வந்தது பற்றியும் சிலாகித்து பேசினார்.  

 

பட புரோமோஷனில் பேசிய ஜாரெட், “அவர் என்னுடைய சிறந்த நண்பர். ஜெஃப் அன்பானவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், பண்பானவர் என அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு சரியாகப் பொருந்திப் போவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் செலவழித்த நேரம் என்றும் மறக்க முடியாது. எனக்கு அவருடன் நேரம் செலவிட இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, சிறந்த வாழ்க்கைக்கு உதாரணமாகவும் இருக்கிறார். அவர் முதல் முறையாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள்" என்றார். 

 

லெட்டோவைப் பொறுத்தவரை பிரிட்ஜஸ் வெறும் சக நடிகர் மட்டுமல்ல! அவர்தான் டிரானின் ஆன்மா. அவர் இல்லாமல் டிரான் படத்தைப் பற்றி யோசிப்பது கூட சாத்தியமற்றது என்கிறார் லெட்டோ. 

 

பிரிட்ஜஸ் தனக்கு படப்பிடிப்பு தளத்தில் Air என செல்லப்பெயர் வைத்ததாகவும் மகிழ்வுடன் சொல்கிறார் லெட்டோ. "இத்தனை வருடங்களில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். உங்கள் ஹீரோவுடன் சேர்ந்து நீங்கள் நடிப்பது எத்தனை சிறப்பான தருணம்" என்றார். 

 

மேலும் சிறுவயதில் அவரைப் பார்த்து வியந்தது பற்றியும் கூறுகிறார், "12 வயது சிறுவனாக முதன் முதலில் அந்தப் படம் பார்த்தது என் வாழ்க்கையை மாற்றியது. அந்தப் படத்தின் தொழில்நுட்பம், கிரியேட்டிவிட்டி, ஃபன், அட்வென்ச்சர் எல்லாமே என்னை ஈர்த்தது. முதல் இரண்டு டிரான் படங்களில் அவர் நடிப்பில் மிரட்டியிருப்பார்.  அவருடன் இணைந்து பணியாற்றியது என் அதிர்ஷ்டம். அவரது வழியில் என்றும் நடக்க முயல்வேன்" என்றார். 

 

டிஸ்னியின் 'டிரான்: ஏரஸ்' அக்டோபர் 10, 2025 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Related News

10684

கவனம் ஈர்க்கும் பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ டிரைலர்!
Tuesday September-30 2025

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

ஜீ5 தமிழின் ‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Tuesday September-30 2025

ஜீ5 தமிழின் புதிய தமிழ் இணையத் தொடரான ‘வேடுவன்’ டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

’இறுதி முயற்சி’ நல்ல படத்தில் நடித்த திருப்தியை எனக்கு கொடுத்திருக்கிறது - நடிகர் ரஞ்சித் நெகிழ்ச்சி
Monday September-29 2025

வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறுதி முயற்சி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

Recent Gallery