பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்கும் என்பதை டிரைலர் வெளிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரம்மாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் உள்ளங்களையும் கவரவிருக்கிறது.
ரூ.1,200 கோடி வசூலித்த கல்கி 2898 AD வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் புதிய வேடத்தில் திரைக்கு வரும் இந்தப் படத்தின் மீது குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
படக்குழு மூன்று நிமிடத்திற்கும் அதிகமான டிரெய்லரை, படத்தின் வெளியீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருப்பது, படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 105 தியேட்டர்களில் டிரெய்லர் மாஸ் ஸ்கிரீனிங்ஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரம், விசில் முழக்கங்களுடன் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர். அதேசமயம், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் People Media Factory’ன் டிஜிட்டல் தளங்களிலும் டிரெய்லர் வெளியிடப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.
படம் குறித்து இயக்குநர் மாருதி கூறுகையில், “தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே. பிரபாஸ் அவர்கள் தனது திரை ஆளுமையாலும், தனித்துவ நடிப்புத் திறமையாலும் வேடத்தை சிறப்பாகக் கொண்டுசென்றுள்ளார். சமீபத்தில் முடிந்த இன்ட்ரோ பாடல் எனக்குப் பெரும் அனுபவமாக இருந்தது – அதை நீங்கள் டார்லிங் ரெபெல் ஸ்டாருக்கான அன்பாகக் கருதினாலும், டைட்டில் பாடலாக கருதினாலும் அது எங்கள் இதயத்திலிருந்து உருவாகி வந்தது.” என்றார்.
தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் (People Media Factory) கூறுகையில், “இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் செட் உருவாக்கியதிலிருந்து, ரெபல் ஸ்டார் பிரபாஸை முன்னணியில் வைத்து சக்திவாய்ந்த நடிகர் பட்டாளத்தை அமைத்தது வரை, எங்கள் குறிக்கோள் மறக்க முடியாத பான்-இந்திய அனுபவத்தை தர வேண்டும் என்பதே. டிரெய்லருக்கான ரசிகர்களின் பெரும் வரவேற்பு, எங்கள் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது கொண்டாட்டத்தின் தொடக்கம் மட்டுமே.” என்றார்.
பிரபாஸ் உடன் சஞ்சய் தத், பூமன் இரானி, சரினா வாஹாப், மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம், சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளோடும் அமானுஷ்ய உலகின் களத்தோடும் திரைக்கு வருகிறது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி People Media Factory நிறுவனத்தின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தமன் எஸ் இசையமைத்து, பிரம்மாண்ட காட்சிகளுடன், ஹாரர், ஃபாண்டஸி, நகைச்சுவை, உணர்ச்சி என அனைத்தையும் இணைக்கும் இந்தப் படம், ரசிகர்கள் ஆராதிக்கும் பிரபாஸின் தனித்துவமான திரை ஆளுமையை அசத்தலாக வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.
ஜனவரி 9 , 2026 அன்று திரைக்கு வர உள்ளது.
'டிரான்: ஏரஸ்' படத்தில் ஜாரெட் லெட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்...
ஜீ5 தமிழின் புதிய தமிழ் இணையத் தொடரான ‘வேடுவன்’ டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...
வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறுதி முயற்சி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...