‘மெர்சல்’ படத்தின் சர்ச்சையை தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் அரசியலுக்கு வர வேண்டும், என்று ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவர் வேறு யாருமல்ல, விஜயின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஏற்கனவே அரசியல் பாதையில் சென்ற விஜய் பல இன்னல்களை சந்தித்ததற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் தான் மிக முக்கிய காரணம்.
இந்த நிலையில், மெர்சல் விவகாரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை. ஆனால், அரசியலுக்கு அவர் வருவது குறித்து அவர் தான் முடிவு எடுப்பார்.
விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம். விஜய் ஒரு தலைவராக உருவாகி அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும். நடிகர் விஜயின் மீது மதச்சாயம் பூச வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல், விஷால் என்று அரசியலில் ஈடுபட இருக்கும் நடிகர்களில் விஜயும் இணைந்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...