Latest News :

நயன்தாரா மற்றும் கவின் நடிக்கும் ’ஹாய்’ முதல் பார்வை வெளியானது
Thursday October-09 2025

ஜீ ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் 'ஹாய்' (Hi) படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

படம் பற்றி இயக்குநர் விஷ்ணு எடவன் கூறுகையில், “’ஹாய்’ முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (08.10.2025) வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் முழுமையாக காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

 

Hi First Look

 

நயன்தாராவும், கவினும் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் கவனம் ஈர்த்துள்ளது.

 

ஜென் மார்டின் இசையமைக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் ஷுக்லா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்ய, பிருந்தா நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.  உமேஷ் குமார் பன்சால், நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ்.எஸ். லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக அக்‌ஷய் கெஜ்ரிவால் மற்றும் மயில்வாகனன் பணியாற்றுகிறார்கள்.

Related News

10699

ஐபோனில் எடுக்கப்பட்ட ‘அகண்டன்’ இன்று திரையரங்குகளில் வெளியாகிறது
Friday October-10 2025

உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் செழியன் இயக்கத்தில் வெளியான ’டூலெட்’...

‘வில்’ திரைப்படம் எனக்கு மிக முக்கியமான படம் - நடிகை சோனியா அகர்வால்
Thursday October-09 2025

புட் ஸ்டெப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் (Foot Steps Production) தயாரிப்பில், கோதாரி மெட்ராஸ் இண்டர்நேஷ்னல் லிமிடெட் (Kothari Madras International Limited) இணைந்து வழங்க, இயக்குநர் எஸ்...

Recent Gallery