Latest News :

‘ஒண்டிக்கட்ட’ பாடல்கள் எனக்கு புது வாழ்வை அமைத்து தரும் - பரணி நம்பிக்கை
Tuesday August-01 2017

இசையமைப்பாளர் பரணி இசையமைத்து இயக்கியுள்ள படம் ‘ஒண்டிக்கட்ட’. இதில் விக்ரம் ஜெகதீஷ் ஹீரோவாக நடிக்க, நேகா ஹீரோயினாக நடித்துள்ளார். பிரண்ட்ஸ் சினி மீடியா நிறுவனம் சார்பில் மேகலா ஆர்.தர்மராஜ், ஷோபா கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ரயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.    

 

ஆலிவர் ஓளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் பாடல்களை கபிலன், பரணி, தர்மா ஆகியோர் எழுதியுள்ளார்கள். குபேந்திரன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, கலைத் துறையை ராம் கவனிக்கிறார். சிவசங்கர், தினா, ராதிகா ஆகியோர் நடனத்தை வடிவமைத்துள்ளனர். விது ஜீவா எடிட்டிங் செய்ய, தயாரிப்பு மேற்பார்வையை பாண்டியன் கவனிக்கிறார்.

 

இப்படம் குறித்து கூறிய பரணி, ”சமீபத்தில் நான் தஞ்சாவூருக்கு போனேன், அங்கே நான் பயணம் செய்த ஒரு காரில் ஒண்டிக்கட்ட பாட்டு தான் பாடிக் கொண்டிருந்தது. ஒரு படைப்பாளிக்கு அதை விட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும். இசையால் எதையும் வெல்ல முடியும். அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை எவரையும் இசையால் கட்டிப் போட முடியும். புராண காலங்களில் கடவுள் கூட இசைக்கு மயங்கிய கதைகளை கேட்டிருக்கிறோம்.

 

இந்த படத்து பாடல்கள் நிச்சயம் எனக்கு இன்னொரு புது வாழ்க்கையை அமைத்டு தரும். பாடல்கள் மட்டுமில்லை, படமும் எனக்கு பேர் வாங்கித் தரும். படத்தை பார்த்தவர்கள் அத்தனை பேருமே கை தட்டி பாராட்டி இருக்கிறார்கள்.

 

இந்த ஒண்டிக்கட்ட படம் ஒரு யதார்த்தமான படம். ஒரு மெல்லிய நீரோடையில் பயணப்படுகிற மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். நாம் நாகரிக முலாம் பூசிக் கொண்டாலும் உள்ளுக்குள் கிராமிய சிந்தனைகளே அதிகம் கொண்டவர்கள். நகரத்து வாழ்க்கை சலிப்புறும் எவருமே கிராமத்து மண்வாசனையை எதிர்பார்த்து 

ஏங்கி கிடப்பார்கள். இந்த படத்தில் அந்த கிராமத்து எதார்த்தம் இருக்கும். எனது முந்தைய படங்கள் பலவற்றின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் என்னையும் என் படத்தையும் கொண்டு சேர்த்தது. இந்த ஒண்டிக்கட்ட படத்தின் பாடல்கள் இப்போதே பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் துண்டு பீடி பாட்டு பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.” என்றார்.

Related News

107

’மை லார்ட்’ மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது! - மகிழ்ச்சியில் சசிகுமார்
Thursday February-19 2026

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது   சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...

முதல் பார்வையை வெளியிட்ட ’அச்சுத அவதாரம்’ படக்குழு!
Thursday February-19 2026

நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’...

’ஹாட் ஸ்பாட் 2’ இயக்குநருக்கு கிடைத்த வெற்றி பரிசு!
Thursday February-19 2026

கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது...

Recent Gallery