Latest News :

‘வில்’ திரைப்படம் எனக்கு மிக முக்கியமான படம் - நடிகை சோனியா அகர்வால்
Thursday October-09 2025

புட் ஸ்டெப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் (Foot Steps Production) தயாரிப்பில், கோதாரி மெட்ராஸ் இண்டர்நேஷ்னல் லிமிடெட் (Kothari Madras International Limited) இணைந்து வழங்க, இயக்குநர் எஸ்.சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில்,  முழுமையான நீதிமன்ற நாடகமாக உருவாகியுள்ள திரைப்படம் ’வில்’ (உயில்). 

 

ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம்.  இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விக்ராந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  

 

வழக்கறிஞராக பணியாற்றிய எஸ்சிவராமன்,  தான் சந்தித்த உண்மையான வழக்கை, மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால்  இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க நீதிமன்ற படமாக உருவாகியுள்ள இப்படம் சென்னை மற்றும் கோத்தகிரியில் படமாக்கப்பட்டுள்ளது. 

 

உறவுகளின் சிக்கல்களை, ஒரு பெண்ணின் தியாகத்தினை பேசும், ஒரு அழகான படைப்பாக, அனைவரும் ரசிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ள ‘வில்’ அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.சிவராமன் பேசுகையில், “இந்த திரைப்படம் உருவாகக் காரணம் என் எடிட்டர் தினேஷ் தான். அவரிடம் கோர்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றிச் சொன்ன போது, சார் இதைப் படமாக்கலாம் என்றார். ஜட்ஜாக நடிக்க யாரை அணுகலாம் என நினைத்த போது சோனியா அகர்வால் மேடம் ஞாபகம் வந்தது, மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால்  இசை கற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை இப்படத்தில் அறிமுகம் செய்தேன். மிக அற்புதமாக இசையைத் தந்துள்ளார். இப்படம் ஒரு உயில் சம்பந்தப்பட்டது, உயில் பல குடும்பங்களில் பிரச்சனையாக அமைந்துள்ளது. இது பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. எடிட்டர் லெனின் சார் படம் பார்த்து என்னைப் பாராட்டினார் அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. கண்டிப்பாக மக்கள் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன். விக்ராந்த் இன்வஸ்டிகேடிவ் ஆபிஸராக நடித்துள்ளார். அலிகியா எல்லோரும் செய்யத் தயங்கிய ரோலில் சிறப்பாக நடித்தார் அவருக்கு நன்றி.  இது அடிதடி, துப்பாக்கி எல்லாம் வரும் ஆக்சன் படமல்ல. ஃபீல் குட் படம்.  படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார். 

 

நடிகை அலீகியா பேசுகையில், “திரையுலகிற்கு நான் புதியவள். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சிவராமன் அவர்களுக்கு நன்றி. சோனியா மேடம் கூட நடித்தது நல்ல அனுபவம். என்னை எல்லோரும் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.” என்றார்.

 

நடிகை சோனியா அகர்வால் பேசுகையில், “இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். எனது தம்பி சௌரப் அகர்வால்  இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். என்னைப்போல அவருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள். சிவராமன் சாருடன் ஏற்கனவே தனிமை படம் வேலை பார்த்துள்ளேன். மக்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து கதை சொல்வார். அவரே வழக்கறிஞராக இருந்தவர். இந்தக் கதையை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். விக்ராந்துடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, காதல் கொண்டேன் 1 கோடியில் எடுத்து பிளாக்பஸ்டர் ஆனது. மக்களுக்கு எந்த கதை பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.  இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

Related News

10702

ஐபோனில் எடுக்கப்பட்ட ‘அகண்டன்’ இன்று திரையரங்குகளில் வெளியாகிறது
Friday October-10 2025

உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் செழியன் இயக்கத்தில் வெளியான ’டூலெட்’...

அசுரனை மிஞ்சுமா சிலம்பரசனின் ‘அரசன்’?
Thursday October-09 2025

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் டி...

Recent Gallery