Latest News :

ஐபோனில் எடுக்கப்பட்ட ‘அகண்டன்’ இன்று திரையரங்குகளில் வெளியாகிறது
Friday October-10 2025

உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் செழியன் இயக்கத்தில் வெளியான ’டூலெட்’. இந்த திரைப்படத்தின் நாயகனாக அறிமுகமானவர் சந்தோஷ் நம்பிராஜன். அதன் பின் ‘வட்டார வழக்கு’, ’உழைப்பாளர் தினம்’ என இவர் நடித்த படங்கள் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டவை. இவர் நடிப்பில் அடுத்த விரைவில் வெளியாகும் ’ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்’ சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. சொட்ட வைக்கும் காதல் ரசத்தோடு  ’காதலிசம்’ திரைப்படமும் இணையத்தில் வெளியாகி, லிவிங் டுகெதர் மற்றும் கல்யாணம், எது வருங்கால தலைமுறைக்கு சிறந்தது என்று பேசி பலராலும் பாராட்டப்பட்டது.

 

இந்த நிலையில், தமிழில் முதல் முயற்சியாக ஐபோன் 11 மேக்ஸில் ஒரு சினிமாவை வார்த்தெடுத்திருக்கிறார் சந்தோஷ் நம்பிராஜன். ஆம் செல்போனில் எடுக்கும் படங்கள் ஒரு வீடு, சின்ன கிராமம் அதைத்தாண்டி அந்த பட்ஜெட்டில் யோசிக்க முடியாது. அந்த தியரியை உடைத்து இந்தியா, சிங்கப்பூர், மலேசியா என மூன்று நாடுகளில் போனில் சூட் செய்து சாத்தியம் என்பதை ’அகண்டன்’ திரைப்படத்தில் நிரூபித்திருக்கிறார்.

 

’அகண்டன்’ திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு புதிய வாசலை திறக்கிறது. இனி செல்போனில் படம் பார்ப்பது மட்டுமல்லாமல் படம் எடுத்து வெளியிடவும் முடியும்.  இந்த ‘அகண்டன்’ படம் அகண்ட திரையான திரையரங்கிற்கு வருவது தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாய்ச்சல். அந்த வகையில், இன்று (அக்டோபர் 10) ‘அகண்டன்’ திரையரங்குகளில் வெளியாகிறது. சினிமா விரும்பிகளுக்கும், அதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்த முயற்சி நிச்சயம் புதிய வழிக்காட்டியாக இருக்கும் என்பது உறுதி.

 

படத்தை சந்தோஷ் நம்பிராஜனும், அவரது சகோதரர் பிரேம்சந்த் நம்பிராஜனும் இணைந்து நம்பிராஜன் இன்டர்நேஷனல் சினிமாஸ் சார்பில் தயாரித்துள்ளனர். சிங்காவுட் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இணை தயாரிப்பு மேற்கொண்டுள்ளது. 

 

சந்தோஷ் நம்பிராஜன், ஹரினி, பிரபல சிங்கப்பூர் நடிகர் யாமீன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நான்கு சண்டை காட்சிகள் பிரமிக்க வைக்கும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஏ.கே.பிராங்ளின் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோட்டீஸ்வரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

 

நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார்.

Related News

10704

‘வில்’ திரைப்படம் எனக்கு மிக முக்கியமான படம் - நடிகை சோனியா அகர்வால்
Thursday October-09 2025

புட் ஸ்டெப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் (Foot Steps Production) தயாரிப்பில், கோதாரி மெட்ராஸ் இண்டர்நேஷ்னல் லிமிடெட் (Kothari Madras International Limited) இணைந்து வழங்க, இயக்குநர் எஸ்...

அசுரனை மிஞ்சுமா சிலம்பரசனின் ‘அரசன்’?
Thursday October-09 2025

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் டி...

Recent Gallery