Latest News :

தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கையாக துருவ் இருப்பார்! - பிரபலங்களின் பாராட்டால் மாரி செல்வராஜ் மகிழ்ச்சி
Monday October-13 2025

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஷ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தயாரிப்பில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைசன்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 17  ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

 

படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தின் உருவாக்கம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறுகையில், “’பைசன்’ என் கரியரில் முக்கியமான படம். மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொழுது ஒரு பக்குவத்தை இந்த கதையே எனக்கு கொடுத்தது.  இந்த கதையை மக்கள் பார்ப்பதன் மூலமாக ஒன்று நடக்கும் என்று நம்புகிறேன். இதில் கபடி வீரர் மணத்தி கணேசன் கதையும் இருக்கிறது, என் கதையும் இருக்கிறது , பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்கள் பலபேரின் கதையும் இருக்கிறது.

 

இந்த படத்திற்காக தன்னை என்னிடம் ஒப்படைத்த துருவ் விக்ரம்,  தயாரித்த பா.இரஞ்சித் அண்ணன் , நடித்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

 

இந்தக்கதையை அவ்வளவு எளிதாக ரெகுலர் சினிமா சூட்டிங் மாதிரி பண்ணிவிட முடியாது, ஒரு வருடம் பயிற்சி செய்து முழு கபடி வீரராக, தென் தமிழகத்து கிராமத்து இளைஞனாக மாறுவதும், கடுமையான உடல் உழைப்பும் தேவைப்பட்டது. படம் துவங்கி கொஞ்ச நாளில் துருவால் முடியவில்லை. ரொம்ப கஸ்டப்பட்டான், வேறு கதை பண்ணிடலாமான்னு அவனிடம் கேட்டேன்.

 

”இல்லை கஸ்டமாத்தான் இருக்கு, நீங்களும் இந்த படம் பண்ணனும்னு வெறியா இருக்கீங்க, உங்களுக்கு கனவுப்படம்னு தெரியுது,  நான் உங்களை அப்பா மாதிரி நினைச்சுகிட்டு வரேன், நீங்க என்ன பார்த்துப்பீங்கன்னு நம்புறேன்” என்று சொன்னான், அந்த வார்த்தைகள் என்னை அசைத்துப்பார்த்துவிட்டன.

 

அவனுக்கு எதுவும் நடந்துவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொண்டேன். நான் மற்ற படங்களை விட அதிகபட்சமான உழைப்பை போட்டேன். எல்லாத்தையும் நான் நல்லபடியாக செய்து முடிப்பேன் என்று நம்பினான். மொத்த குடும்பமும் நம்பியது.

 

எல்லா நடிகர்களும் இதை செய்ய மாட்டாங்க இரண்டு வருடங்கள் பயிற்சி எடுத்து,  படப்பிடிப்புக்காக நிறைய நாட்கள் ஒதுக்கி முழுமையாக அர்பணித்திருக்கிறார் துருவ். படம் பார்த்தால் இதன் அசல் தன்மை தெரியும்.

 

என் நலன்விரும்பிகள் எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு ”நீ சாதிச்சிட்ட நினைச்சதை அடைஞ்சிட்டேன்னு” சொன்னாங்க. தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கையாக துருவ் இருப்பார் என்றும் அவரின் சினிமா ஆரம்பமாகிவிட்டது என்றும் ஒவ்வொருவரும் தனித்தனியாக என்னிடம் சொன்னார்கள். அதை கேட்ட எனக்கும் துருவுக்கும் பெரும் மகிழ்ச்சி. அதையே மக்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்.” என்றார்.

Related News

10709

’ரிவால்வர் ரீட்டா’ குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படம் - நடிகை கீர்த்தி சுரேஷ் உறுதி
Wednesday November-26 2025

இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...

முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாடகி மாலதி லக்‌ஷ்மண்!
Wednesday November-26 2025

இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் தயாரிக்கும் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி!
Wednesday November-26 2025

நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே...

Recent Gallery