Latest News :

இதுவரை பார்க்காத மமிதாவை ’டியூட்’ படத்தில் பார்ப்பீர்கள்! - பிரதீப் ரங்கநாதன் உற்சாகம்
Tuesday October-14 2025

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் ‘பிரமலு’ புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்ரோபர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர்கள் கலந்து கொண்டு படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி பேசுகையில், ”மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு முதலில் நன்றி! மைத்திரியுடன் எங்களுடைய நான்காவது படம் இது. இந்த படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு வாழ்த்துக்கள். இதைப்போல பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ என ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள். திறமையாளர்கள் மற்றும் நல்ல கதைகளை ஏஜிஎஸ் நிறுவனம் எப்போதும் ஆதரிக்கும். அந்த வகையில், இந்தப் படத்தின் சிறு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” என்றார். 

 

பின்னணி பாடகர்கள் திப்பு & ஹரிணி பேசுகையில், ”இந்தத் தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விஷயம் எங்களுக்கே நடப்பது போல பெருமையாக உள்ளது. சாயின் கடின உழைப்பிற்கு இன்னும் பெரிய உயரம் செல்ல வேண்டும். இந்த வயதில் ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வேலை செய்கிறான்” என்றனர். 

 

நடிகர் ஜிபி முத்து பேசுகையில், ”பிரதீப் ரங்கநாதனின் படங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அவரின் 'டியூட்' படமும் பார்க்க ஆவலுடன் உள்ளேன்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி பேசுகையில், “நானும் இயக்குநர் கீர்த்தீஸ்வரனும் 'சூரரைப் போற்று' படத்தில் ஒன்றாகப் பணிபுரிந்தோம். அந்தப் படத்தில் அவர் உதவி இயக்குநராக இருந்தபோதே அவருடைய ஆர்வம் எனக்கு தெரிந்தது. அந்தப் படம் முடிந்ததும் மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் கீர்த்தியை அறிமுகம் செய்தேன். அவர்களுக்கும் கீர்த்தி சொன்ன 'டியூட்' கதை உடனே பிடித்து விட்டது. 'டிராகன்' படத்திற்கு பிறகு பிரதீப்புடன் இணையும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் மெச்சூர்டான பிரதீப்பை நீங்கள் பார்ப்பீர்கள். மமிதாவும் பிரதீப்பும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். சரத் சார் சீனியர் நடிகர் என்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் நிரூபித்துள்ளார். இந்தப் படத்திற்கு முன்பிருந்தே சாய் அபயங்களின் மெலோடி பாடல்களுக்கு நான் ரசிகன். படத்தின் தொழில் நுட்பக் குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் எனது அணியினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் சரத்குமார் பேசுகையில், “அறிமுக இயக்குநராக கீர்த்திஸ்வரனுக்கு தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் மிகப் பெரும் ஆதரவு கொடுத்துள்ளது. எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற துடிப்பு கொண்ட இயக்குநர்- நடிகர் பிரதீப் ரங்கநாதன். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. முதலில் 'டியூட்' படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். ஆனால், கீர்த்தி கதை முழுவதும் டெடிகேட்டடாக என்னிடம் சொன்ன பின்பு புதிய சரத்குமாரை இந்த படத்தில் காண்பதற்கான முயற்சி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. படத்தில் மமிதா, சாய் என அனைவருமே சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.

 

Dude

 

நடிகை மமிதா பைஜூ பேசுகையில், “இந்த பட வாய்ப்பு கொடுத்த என்னுடைய இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பிரதீப் ரங்கநாதனிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படத்தில் சில காட்சிகள் நடிக்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கும். அப்போது சரத் சார் என்னை கூல் செய்வார். எல்லோரும் தீபாவளிக்கு 'டியூட்' படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார். 

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி ஷங்கர் பேசுகையில், ”இப்படி ஒரு நல்ல படத்தை கொடுத்த இயக்குநர் கீர்த்தீஸ்வரனுக்கு நன்றி. மமிதா மற்றும் சாய் அபயங்கர் எங்கள் பேனரில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. தமிழில் இது எங்களுடைய இரண்டாவது படம். 8 வயது முதல் 80 வயது வரை எல்லா வயதினரும் இந்த படத்தை பார்த்து கொண்டாடலாம். லவ், எமோஷன், ஆக்சன், செண்டிமெண்ட் என எல்லா விஷயங்களும் இந்த படத்தில் அமைந்துள்ளது.” என்றனர். 

 

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசுகையில், “ரொம்பவே எமோஷனலாக உள்ளது. எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. என்னுடைய 'கட்சி சேரா' பாடல் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கீர்த்தி என்னிடம் கதை சொன்னார். உடனே, அவருடன் வேலை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். என்னுடைய முதல் படமே தீபாவளிக்கு வெளியாவது ஸ்பெஷலாக உள்ளது. பிரதீப் ப்ரோ, கீர்த்தி ப்ரோ, மமிதா, என்னுடைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. 'ஆச கூட...' பாடலில் மமிதாவை காஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், டேட் பிரச்சினைகள் காரணமாக அது முடியாமல் போய்விட்டது. எனக்கு பிடித்ததை செய்ய அனுமதித்த என் பெற்றோருக்கு நன்றி. பாடல்களைப் போலவே பின்னணி இசையும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேசுகையில், ”எல்லோரைப் போலவும் நானும் உதவி இயக்குநராக, இயக்குநர் சுதா கொங்கராவிடம் 7 வருடங்கள் பணிபுரிந்தேன். 'டியூட்' படத்தின் கதை எழுதி முடித்ததும் நண்பரின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் நிகேத் பொம்மியிடம் கதை சொன்னேன். அவர் பயங்கரமாக என்ஜாய் செய்துவிட்டு மைத்ரியிடம் பேசுவதாக சொன்னார். ஆனால், அப்போது கூட படம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. பிறகு ஹைதராபாத்தில் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொன்னதும் உடனே அவர்களுக்கு பிடித்து விட்டது. படத்தில் 'ஊரும் பிளட்டும்' பாடல் உருவாவதற்கு முன்பு நமக்கு பிடித்தது போல செய்யலாம். இப்போதுள்ள டிரெண்டுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்றுதான் யோசித்தோம். ஆனால், பாடல் வெளியானதும் மக்கள் எல்லோருக்கும் பிடித்து போய் சென்சேஷன் ஆகிவிட்டது. பழைய சரத் சாராக ஆடல் பாடலுடன் இந்த படத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து தான் கதை சொன்னேன். அவருக்கும் பிடித்து விட்டது. மமிதாவுக்கும் நன்றி. 'பிரேமலு', 'சூப்பர் சரண்யா'வில் என்ன செய்தாரோ அதுவும் இந்த படத்தில் இருக்கும். அதை தாண்டி நிறைய எமோஷனாகவும் நடித்துள்ளார் மமிதா. படத்தில் உங்களுக்கு எல்லோருக்கும் பிடித்த பயங்கர ஹைப்பரான பிரதீப்பையும் பார்ப்பீர்கள். இன்னொரு பக்கம் மெச்சூர்டான, எமோஷனலான இன்னொரு வெர்ஷன் பிரதீப்பையும் பார்ப்பீர்கள். என்னுடைய முதல் படத்திலேயே நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே கொண்டு வர சப்போர்ட் செய்த பிரதீப் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. திரையரங்கில் பார்த்து கொண்டாடும் படியாக லவ், ஆக்சன், எமோஷன், ஹியூமர் என எல்லாமே இந்த படத்தில் இருக்கும்.” என்றார். 

 

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ”உங்களில் ஒருவனான என்னை மேடையேற்றியதற்கு நன்றி. சரத் சார் இந்தப் படத்தை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. நான் பார்த்து வளர்ந்த ஹீரோ உடன் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. அவருடைய வயசும் எனர்ஜியும் எனக்கு பயங்கர இன்ஸ்பிரேஷன். 'லவ் டுடே' படத்திற்காக ஹீரோயின் தேடிக்கொண்டிருந்த போது மமிதாவை ஒரு ஷார்ட் ஃபிலிமில் பார்த்தேன். 'லவ் டுடே' படத்திற்காக அவரை முயற்சி செய்தபோது அவர் 'வணங்கான்' படத்தில் பிசியாக இருந்ததால் பிடிக்க முடியவில்லை. ஆனால், 'டியூட்' படத்தில் மமிதா தான் நடிக்கிறார் என கீர்த்தி சொன்ன போது சர்ப்ரைஸ் ஆக இருந்தது. இதுவரை பார்க்காத மமிதாவை இந்த படத்தில் பார்ப்பீர்கள். நேஹாவும் அற்புதமாக நடித்துள்ளார். டிராவிட், ரித்து, ரோகிணி மேம் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் ஒரு பெரிய இயக்குநராக கீர்த்தி வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. அவரை என் தம்பி போலதான் பார்க்கிறேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு என்னை பாடவும் வைத்த சாய் அபயங்கருக்கு நன்றி. தீபாவளியை 'டியூட்' படத்துடன் கொண்டாடுங்கள்.” என்றார்.

Related News

10710

எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது மகிழ்ச்சி! - சீமான் பாராட்டு
Saturday October-11 2025

எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் 'மைலாஞ்சி' திரைப்படத்தில் 'கன்னி மாடம்' பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்...

இளம் நெஞ்சங்களையும், இசை பிரியர்களையும் கொள்ளை கொண்ட “நீ என்னை நெருங்கையிலே...” பாடல்!
Saturday October-11 2025

திரைப்பட பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த தென்னிந்திய மக்கள் தற்போது சுயாதீன இசை ஆல்பங்கள் மற்றும் தனிப்பாடல்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்...

Recent Gallery