தொடர் வெற்றி பட நாயகனான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம், இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இன்று (அக்.17) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டியூட்’ படத்தில் இதுவரை பிரதீப் ரங்கநாதன் படங்களில் பார்க்காத ஒன்றை பார்க்கப் போகிறீர்கள், என்று கூறிய இயக்குநர் கீர்த்தீஸ்வரன், எது என்ன ? என்பதை தற்போது தெரிவித்துள்ளார்.
அதாவது, ஹீரோயிசம் என்றாலே மாஸ் காட்சிகள் தான் என்ற விதியை உடைத்து, புதிய கோணத்தில் ஹீரோயிசத்தை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ‘டியூட்’ படத்தில் காட்டியிருக்கிறாராம். பிரதீப் ரங்கநாதனும் அதை சிறப்பாக செய்து அசத்தியிருப்பதாகவும், இது ரசிகர்களை நிச்சயம் வெகுவாக கவரும், என்றும் கீர்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒரு இயக்குநர் படத்தை உருவாக்குவது மட்டுமல்லாது அந்தப் படத்தை சுற்றிலும் எந்தளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம் என்பதிலும் படத்தின் வெற்றி அடங்கும். அந்த வகையில், படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான 'ஊரும் பிளட்டும்...' முதல் டிரெய்லர் வரை படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மிகச்சரியாக கொண்டு சேர்த்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கீர்த்தீஸ்வரன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “என் மீது நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. சினிமாத்துறையில் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான மைத்ரி கோலிவுட்டில் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'குட் பேட் அக்லி' மூலம் அடியெடுத்து வைத்தது. அப்படி இருக்கையில் அவர்கள் தமிழில் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு அனுபவம் வாய்ந்த பெரிய இயக்குநர்களை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனால், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை மிகப்பெரியது. இதற்கு நன்றி!
'டியூட்' திரைப்படத்தில் நாங்கள் பணிபுரிய தொடங்கியபோது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் படம் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் மிகப்பிடித்த ஹீரோவாக வளர்ந்து வருகிறார் பிரதீப். படத்தில் அவரது கதாபாத்திரம் முலம் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். பிரதீப்பும் அதை சரியாக புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்.
படம் பற்றி கேட்டபோது, "ரசிகர்களுக்கு தீபாவளிக்கு சிறந்த பரிசாக எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜாக 'டியூட்' இருக்கும். மமிதா பைஜூ, சரத்குமார் சார் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்து நிச்சயம் 'டியூட்' திரைப்படம் முழுமையான எண்டர்டெயினராக இருக்கும்.” என்றார்.
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடிக்க, சரத்குமார், ஹிருது ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ்...
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்'...
’ஈட்டி’ மற்றும் ‘ஐங்கரன்’ படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது படத்தை விஷாலே இயக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...