’ராஜா ராணி’, ’பிகில்’, ‘மெர்சல்’ என தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்த இயக்குநர் அட்லி, ‘ஜவான்’ மூலம் பாலிவுட் சினிமாவிலும் வெற்றிப் பட இயக்குநராக அறிமுகமானார். தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படும் அட்லி, விளம்பரத்துறையில் எண்ட்ரி கொடுத்து, தனது முதல் விளம்பர படத்தின் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் ‘ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்’ என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர அறிமுகத்தை இயக்குநர் அட்லீ நிகழ்த்தியுள்ளார். இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் அட்லியின் பிரத்தியேகமான ஸ்டைலில் பிரமாண்டம், இதுவரை காணாத விஷுவல் எபெக்ட்ஸ், அதிரடி காட்சிகள் என அனைத்தும் கலந்த இந்தப் படைப்பை, ஒரு சிறந்த குழு இணைந்து, இணையத்ததையே வைரலாக கலக்கும் அளவுக்கு உருவாக்கியுள்ளது!
இது குறித்து இயக்குநர் அட்லி கூறுகையில், “அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம். சிங்ஸ் இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை, இந்திய மக்கள் பார்த்தவுடன் விரும்பும் வகையிலான ஒன்றை உருவாக்கவே நினைத்தார்கள். அதனால்தான் நான் என் முதல் விளம்பரத்துக்கு ஒப்புக்கொண்டேன். ரன்வீரின் அசரவைக்கும் துறுதுறுப்பு, பாபி சார் மாயம், ஸ்ரீலீலாவின் ஃப்ரெஷ்னெஸ் — இதையெல்லாம் நாங்கள் மிகச்சிறப்பாக ஒன்று சேர்த்தோம். இனி அதை பார்வையாளர்கள் ரசிக்கட்டும்.”
புதிய சிங்ஸ் தேசி சைனீஸ் விளம்பரம் விளம்பரத்துக்கும் சினிமாவுக்கும் இடையிலான எல்லையை முற்றிலும் அழித்துவிட்டது. இது ஒரு 8 நிமிட கதை வடிவிலான அனுபவமாக, டிராமா, நகைச்சுவை, ஆக்ஷன், இசை, மசாலா என அனைத்தையும் ஒருங்கே வழங்குகிறது.
இந்த விளம்பரம் ஸ்ரீலீலாவின் கவர்ச்சியாலும், ’லார்ட்’ பாபி தியோல் அவர்களின் அதிரடியிலும் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. அனிமல் மற்றும் தி பா**டட்ஸ் ஆஃப் பாலிவுட் போன்ற ப்ளாக்பஸ்டர் படைப்புகளில் அசரவைத்த பாபி தியோல் மீண்டும் சிங்ஸ் மூலம் தனது ஸ்வாக் ஸ்டைலில் கலக்குகிறார்.” என்றார்.
டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் தீபிகா பான் கூறுகையில், “சிங்ஸில் ஒவ்வொரு உணவும் ஒரு ப்ளாக்பஸ்டர் போல இருக்க வேண்டும், மிக உறுதியானதாகவும், சுவைமிக்கதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். ரன்வீர் சிங் மீண்டும் ஆக்ஷனில் களமிறங்கியிருப்பதால் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது. ஐந்து படங்களுப்பின், அவரின் எனர்ஜி இன்னும் உச்சத்தில் இருக்கிறது. இது எங்கள் மிகப்பெரிய, மிகுந்த உற்சாகமான தேசி சைனீஸ் கொண்டாட்டம், இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும்!” என்றார்.
இந்தப் படத்தில் ஷங்கர்–எசான்–லாய் இசையமைப்பில் உருவான புகழ்பெற்ற ”மை நேம் இஸ் ரன்வீர் ஜிங்” என்ற ஆந்தம் இடம்பெற்றுள்ளது. அர்ஜித் சிங் குரலில், குல்சார் சாஹப் எழுதிய பாடல் இப்போது சாய் அப்யங்கர் மூலம் மறுபதிப்பாக உருவாக்கப்பட்டு, தற்போது எங்கெங்கும் ஒலிபரப்பாகி வருகிறது.
சிங்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் சிங் அட்டாக்ஸ்” படம் நிச்சயமாக #AagLagaaDe என்கிற ஹாஷ்டேக்குக்கு ஏற்ப ஒரு தீப்பற்றி எரியும் அனுபவத்தை தருகிறது.
டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம், டாடா குழுமத்தின் முக்கிய உணவு மற்றும் பானத் துறைகளின் பிராண்டுகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது. அதன் பரந்த வரிசையில் டீ, காஃபி, நீர், உப்பு, பருப்பு, மசாலா, ரெடி-டூ-ஈட் உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை அடங்கும். டாடா டீ, டெட்லி, டாடா காஃபி கிராண்ட், ஹிமாலயன், டாடா சால்ட், டாடா சம்பன்ன், டாடா சோல்ஃபுல், சிங்ஸ் சீக்ரெட், ஸ்மித் & ஜோன்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளை உடைய இந்நிறுவனம், வருடாந்திர ரூ.17,618 கோடி வருவாயுடன், 275, மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்றடைகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் உலகளவிலும் மிகப்பெரிய அளவில் கோலோச்சி வருகிறது.
Reliance Retail’s premium fashion and lifestyle brand AZORTE made waves in the South with the opening of its all-new store at Phoenix Marketcity, Chennai...
கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ்...
தொடர் வெற்றி பட நாயகனான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம், இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது...