வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் 'டயங்கரம்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எல் ஏ ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது.
நடிகரும், அறிமுக இயக்குநருமான வி ஜே சித்து இயக்கத்தில் உருவாகும் ‘டயங்கரம்’ எனும் திரைப்படத்தில் வி ஜே சித்து, நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான் , 'ஆதித்யா' கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, ஏ. கீர்த்தி வாசன் ஆடை வடிவமைப்பாளராகவும், அஸார் நடன இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். சமகால இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது. அத்துடன் படத்தின் இசையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தத் திரைப்படம் இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றலை மையப்படுத்திய படமாக இருக்கும் என்றும், காமெடி, எமோசன் மற்றும் சுய அடையாளத்தை கண்டுபிடித்தல் உள்ளிட்ட இளைஞர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாக 'டயங்கரம் ' இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகத்தை சார்ந்த ஏராளமான பிரபலங்கள் நேரில் வருகை தந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் வெளியீடு குறித்த அப்டேட் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் - தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் - வி ஜே சித்து- இளவரசு கூட்டணியில் வெளியான இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ வீடியோ - இணையத்தில் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி...
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்...
Zinema Media and Entertainment Ltd. சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி...