Latest News :

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் எம்.ராமலிங்கும் இயக்கும் இப்படத்தில் முனிஷ்காந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.  

 

வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் குறித்து இயக்குநர் கிஷோர் எம். ராமலிங்கம், முனிஷ் காந்த் ராமதாஸ், விஜயலட்சுமி  படத்தை தயாரித்திருக்கும் துரை மற்றும் தேவ் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். 

 

இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம் படம் குறித்து கூறுகையில், “குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இரண்டு வேறுபட்ட மனநிலையில் இருப்பவர்கள் பற்றிய படம் இது. அதில் முனிஷ்காந்த் ராமதாஸ், விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள்.

 

முனிஷ் காந்த்துக்கு கிராமத்தில் இரண்டு ஏக்கர் இடம் வாங்கி அதில் வீடு கட்டிக் கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமியோ நகரத்திலேயே  வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்.

 

இதில் விஜயலட்சுமி தனது எண்ணத்தை அதட்டலுடன் வெளிப்படுத்தினாலும் முனிஷ்காந்த் அதை சர்ச்சையாக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு அமைதியாக குடும்பத்தை நடத்திச் செல்கிறார். இப்படி சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்து வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அது என்ன என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன்.

 

முதல் அரை மணி நேரம் குடும்ப கதையாக செல்லும் படம் பின்னர் யூ ட்யூப் பற்றிய கதையாக மாறி அதன் மூலம் இந்த குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறது என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறேன்.

 

முனீஷ்காந்திடம் இப்படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது முதலில் தயங்கினார். “நான் ஹீரோ கிடையாது. இந்த கதைக்கு எப்படி பொருந்துவேன்.?” என்று கேட்டார்.

 

ஆனால் “இந்த கதாபாத்திரம் குணச்சித்திரம், காமெடி, செண்டிமெண்ட் என்ற எல்லா பரிமாணங்களும் கொண்ட பாத்திரமாக இருப்பதால் பொருத்தமாக இருப்பீர்கள்..!” என்று விளக்கிக் கூறி சம்மதிக்க வைத்தேன்.

 

அதேபோல் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த விஜயலட்சுமியிடம் இந்த கதையை கூறச் சென்றபோது முழு கதையையும் கேட்டுவிட்டு இதில் அவருக்கு உள்ள முக்கியத்துவத்தையும் உணர்ந்து உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.

 

அவர்கள ராதாரவி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகவும் குரோஷி ஆட்டோ டிரைவராகவும் நடிக்கிறார்கள். காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, கோடாங்கி வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் மாளவிகா அவினாஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.” என்றார்.

சுதர்சன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணனிடம் பணியாற்றிய பிரணவ் முனிராஜ் இசையமைக்கிறார். பாடல்களை மோகன் ராஜா கதிர் மொழி, ஏகன் எழுதுகிறார்கள்.

 

முனிஷ்காந்த் ராமதாஸ் கூறுகையில், “நான் ஹீரோவெல்லாம் கிடையாது. அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும். இதில் கதைக்கு பொருத்தமாக இருப்பீர்கள் என்று இயக்குனர் கேட்டதால் நடிக்க ஒப்புக்கொண் டேன். குடும்ப தலைவனாக ஒரு அருமையான பாத்திரம்.

 

சில காட்சிகளில் காமெடி வைக்க வேண்டும் என்று நான் கூறியபோது கூட அதை இயக்குனர் ஏற்கவில்லை. இந்த கதைக்கு இவ்வளவு நடித்தால் போதும் என்று என்னை நடிக்க வைத்தார். இது குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்கும்” என்றார்.

 

கதாநாயகி விஜயலட்சுமி கூறுகையில், ”நிறைய படங்களில் நான்  நடிப்பதில்லை. காரணம் கதாபாத்திரம் நன்றாக இருந்து கதை சரியாக இல்லாவிட்டால் அந்த படம் வெற்றி பெறுவது கடினம். அதனால் கதாபாத்திரமும் வீணாகிவிடும். அதனாலேயே நான் முழு கதையையும் கேட்டு அந்த படம் மக்களுக்கு பிடிக்கும், வரவேற்பு பெறும் என்று எண்ணினால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள் கிறேன். மிடில் கிளாஸ் பட கதையை இயக்குனர் என்னிடம் கூறிய போது கதை மிகவும் பிடித்தது. உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.

 

தயாரிப்பாளர் கே.வி.துரை கூறுகையில்,”இந்தக் கதையை (மறைந்த) டில்லி பாபு சார் தான் கேட்டார். பிடித்துப் போகவே தயாரிக்க ஒப்புக்கொண்டார். சரியான படங்களை அவர் எப்போதும் தேர்வு செய்வார், அந்த வகையில் மிடில் கிளாஸ் படமும் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

Related News

10746

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

‘அங்கம்மாள்’ மூலம் கதையின் நாயகியான நடிகை கீதா கைலாசம்
Sunday November-09 2025

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற  சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...

’ஆட்டோகிராப்’ படத்தை மீண்டும் வெளியிடுவது ஏன்? - இயக்குநர் சேரன் விளக்கம்
Sunday November-09 2025

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...

Recent Gallery