Latest News :

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாண்புமிகு பறை’ திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) மே 2025-இல் பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

 

இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் உலகத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது.

 

அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப் பெற்றுள்ளது. நமது பறை இசையின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை ’மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கே சொந்தமானது.

 

சியா புரொடக்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இது ஒரு சாதாரண கதை அல்ல, பறை என்ற நம் தொன்மை வாய்ந்த இசைக்கருவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது. இது பறைக்கு இன்னொரு பிறப்பு, முடிவல்ல, ஆரம்பம். பறை நம் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும், கலாச்சாரங்களிலும் ஒலித்து வருகிறது. ஆனால், இந்த முறை கதை ஐரோப்பாவிலிருந்து, குறிப்பாக பிரான்ஸிலிருந்து தொடங்குகிறது. பறை எப்படி நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு வலிமையான குரலாக பரவியது என்பதை படம் வலியுறுத்துகிறது.

 

பறை என்பது இசை மட்டுமல்ல, அது ஒரு அடையாளம், ஒரு அதிர்வு, ஒரு சமூக உணர்வு. அந்த அதிர்வில் நம்மையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிதான் ’மாண்புமிகு பறை’.

Related News

10750

’ரெட்ட தல’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Monday November-10 2025

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...

’மாஸ்க்’ பட நிகழ்வில் நடிகை ஆண்ட்ரியா அழகை வர்ணித்த விஜய் சேதுபதி!
Monday November-10 2025

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

Recent Gallery