Latest News :

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’. ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ நிறுவனங்கள் சார்பில் தேவ் மற்றும் கே.வி.துரை தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

’ராட்சசன்’, ‘மரகத நாணயம்’, ‘ஓ மை கடவுளே’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் டில்லி பாபு மறைவிற்குப் பிறகு அந்நிறுவனத்தில் இருந்து வெளியாகும் முதல் படம் என்பதாலும், டில்லி பாபு தேர்வு செய்த கடைசி கதை என்பதாலும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சமீபத்தில் இப்படத்தை பார்த்த தமிழ் சினிமா இயக்குநர்கள் பலர் இப்படத்தையும், இயக்குநரையும் வெகுவாக பாராட்டியதோடு, இப்படம் மக்களுக்கு தேவையான மிக முக்கியமான விசயத்தை பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

’மிடில் கிளாஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் ஏராளமான திரைப்பட இயக்குநர்கள் கலந்து கொண்டு படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். 

 

நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை பேசுகையில், “டில்லி பாபு சார் கதைக்கேட்டு ஓகே சொன்ன படம் இது. அவர் இல்லாமல் நாங்கள் படம் ரிலீஸ் செய்கிறோம். நல்லபடியாக எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார்.

 

இயக்குநர் ரவிகுமார் பேசுகையில், “இந்த சமயத்தில் டில்லி பாபு சாரை நினைவு கூறுகிறேன். ‘மிடில் கிளாஸ்’ படம் பார்த்துவிட்டேன் என்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ‘நாளைய இயக்குநர்’ காலத்தில் இருந்தே ராமதாஸ் அண்ணன் எங்கள் டீமுக்கே பெரிய பக்கபலமாக இருந்தார். அவருடைய கேரக்டர் போலவே இந்தப் படமும் அமைந்ததில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக நடித்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ என்ற டைட்டில் இருப்பதால் குடும்பத்தின் கஷ்டத்தை மட்டும் காட்டாமல் விறுவிறுப்பாக ஜாலியாக இயக்கி இருக்கிறார் கிஷோர். உங்கள் அனைவரையும் படம் நிச்சயம் திருப்தி படுத்தும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!.” என்றார்.

 

இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் பேசுகையில், “டில்லி பாபு சார் தேர்ந்தெடுத்த கதை நிச்சயம் நன்றாக இருக்கும். ராமதாஸ் அண்ணன் 10 வருடங்களாக எனக்கு பழக்கம். நல்ல மனிதர். அவருக்கு நல்லதுதான் நடக்க வேண்டும். விஜயலட்சுமியின் நடிப்பு படத்தில் நன்றாக இருந்தது. எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். ஒரு படம் முடியும்போது அதில் அறம் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அது இருக்கிறது. இயக்குநர் கிஷோருக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.

 

கலை இயக்குநர் மாதவன் பேசுகையில், “நான் ராஜீவ் அவர்களின் சிஷ்யன். ‘லிஃப்ட்’ படம் செய்து கொண்டிருக்கும்போது துரைதான் என்னை கூப்பிட்டார். ஏனோதானே என்று இந்தப் படம் செய்ய முடியாது. ஒவ்வொரு விஷயமும் கவனமாக செய்திருக்கிறோம். நம்பிக்கை கொடுத்த இயக்குநர், கேமரா மேனுக்கு நன்றி.” என்றார்.

 

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசுகையில், “இங்கு இருக்கும் நம் எல்லோருடைய கதைதான் ‘மிடில் கிளாஸ்’. ரொம்ப முக்கியமான கதை இது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.

 

ஸ்ரீகுமரன் ஃபிலிம்ஸ், ராஜ்சிதம்பரம் பேசுகையில். “தமிழ்நாட்டில் ‘லப்பர் பந்து’, ‘மாமன்’ படங்களை விநியோகம் செய்திருக்கிறேன். மூன்றாவது படம் ‘மிடில் கிளாஸ்’. படம் வெற்றியடைய செய்வது உங்கள் கையில்தான் உள்ளது.” என்றார்.

 

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், “தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் திறமையை ஊக்குவித்தவர் டில்லி பாபு சார். அவர் தயாரித்த அனைத்துப் படங்களுமே வெற்றிப் படங்கள்தான். அதற்கு காரணம் டில்லி பாபு சார் சினிமா மீது வைத்திருந்த ஈடுபாடு. அவர் கேட்டு ஓகே சொன்ன இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு தேவை. கிஷோர் நல்ல இயக்குநர் என்பதை படத்தின் டிரைய்லரே சொல்கிறது. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். முனீஷ்காந்தை கதையின் நாயகனாக பார்ப்பதில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக இருந்தாலும் அவர் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். இதுபோன்ற கதாபாத்திரத்தை தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்த விஜிக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் ராஜூமுருகன் பேசுகையில், “என் மனதுக்கு நெருக்கமான படம் இது. எளிமையான கதைதான். ஆனால், அது விஷயம் பெரிது. டிவி நிகழ்ச்சியில் சண்டை போடுவதை கொண்டாடும் இந்த வேளையில், கிரிக்கெட்டில் இருநாட்டு கேப்டன்கள் கைக்கொடுக்காமல் போவதை தேசபக்தி என பேசும் சூழலில் இந்தப் படம் பேசும் விஷயம் முக்கியமானது.” என்றார்.

 

இயக்குநர் விஜய் வரதராஜ் பேசுகையில், “படம் பார்த்துவிட்டேன். படத்தில் பேசப்பட்ட பல பிரச்சினைகளை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் ஆனந்த் பேசுகையில், “டில்லி பாபு சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ’மிடில் கிளாஸ்’ படம் பார்க்கும்போது டில்லி பாபு சார் முகம்தான் நிறைந்திருந்தது. என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையை அவர் மாற்றியிருக்கிறார். படத்தின் பல தருணங்களை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. இசை அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.” என்றார்.

 

எடிட்டர் சான் லோகேஷ் பேசுகையில், “இந்தப் படத்தில் பல எமோஷன் தருணங்கள் உள்ளது. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன் பேசுகையில், “இதுபோன்ற கதைகள் ஏன் எனக்கு வருவதில்லை என ஏக்கமாக எதிர்பார்த்திருந்தேன். கதை மீது நம்பிக்கை உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் சின்சியராக வேலை செய்துள்ளனர். படம் உங்களுக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

இயக்குநர் விஷால் வெங்கட் பேசுகையில், “டில்லி பாபு சார் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை பொறுப்புடன் அடுத்து எடுத்து செல்லும் தேவ் மற்றும் துரை இருவருக்கும் வாழ்த்துக்கள். சந்தோஷமும் நிம்மதியும் எங்கே என்ற தேடுதல் எல்லோருக்கும் வாழ்க்கையில் இருக்கும். அதை தான் இந்தப் படம் சொல்கிறது. உங்களுக்கும் படம் கனெக்ட் ஆகும். முனீஷ்காந்த், விஜயலட்சுமி இருவரும் நடிப்பில் கலக்கிவிட்டார்கள். படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் சுப்ரமணியம் சிவா பேசுகையில், “நம் வாழ்க்கையே பணம் சம்பாதிக்கதான். அதில் இருந்து விலக முடியாது. கார்ல் மார்க்ஸ் மட்டும்தான் ஏழைகளில் இருந்து உலக வரலாறை எழுதினார். அதை எழுதிய கார்ல் மார்க்ஸ் பணத்திற்கு எப்படி கஷ்டப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோன்றுதான் ‘மிடில் கிளாஸ்’ கார்ல் மார்க்ஸூம் கஷ்டப்படுகிறார். விஜயலட்சுமி நுணுக்கமாக சிறப்பாக நடித்திருக்கிறார். பணத்திற்கான போராட்டம்தான் இந்தப் படம். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசுகையில், “இயக்குநர் கிஷோர் திறமையாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ மனிதன் எப்படி இருப்பார் என்பதை திரையில் காட்ட முனீஷ்காந்த் சரியான தேர்வு. மிடில் கிளாஸ் நபர்களிடம் எப்போதும் கனவும் ஏக்கமும் இருந்து கொண்டே இருக்கும். அவன் வாழ்வை மாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதை அவன் தவற விட்டு அதற்காக போராடும் விஷயம்தான் இந்தப் படத்தின் கதை. விஜயலட்சுமிக்கு இந்தப் படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா பேசுகையில், “என் கதையே படமாக இருக்கிறதே என்ற எண்ணம்தான் படம் பார்க்கும்போது எனக்கு தோன்றியது. படத்தின் முதல் ஷாட்டிலேயே இது வேற லெவல் படம் என்பது புரிந்தது. திரைக்கதை புதுமையாக இருந்ததுதான் பெரும்பலம். முனீஷ்காந்த், விஜயலட்சுமி பற்றி பேசாமல் இந்தப் படம் கிடையாது. விஜி அசத்தி இருந்தார். முனீஷ்காந்த் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். தொழில்நுட்பக் குழுவினரின் பணிக்கு வாழ்த்துக்கள். தேவ் மற்றும் துரைக்கு வாழ்த்துக்கள். திரையில் இந்தப் படத்தை என் குடும்பத்தோடு மீண்டும் பார்க்க காத்திருக்கிறேன்.” என்றார்.

 

பாடகர் ஆண்டனி தாசன் பேசுகையில், “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளருக்கு நன்றி. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் சக்திவேல் பேசுகையில், “டில்லி பாபு சார் கம்பெனியில் பெரும்பாலும் அறிமுக இயக்குநர்கள்தான். திறமை மீது நம்பிக்கை வைத்தவர்தான் டில்லி பாபு. ’மிடில் கிளாஸ்’ படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நடிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

 

Middle Class

 

இயக்குநர் ரவீந்திரன் பேசுகையில், “என்னுடைய இரண்டு படங்களுக்கு கோ-டைரக்டராக பணியாற்றினார் கிஷோர். இப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். இந்தக் கதையை முதலில் என்னிடம்தான் சொன்னார். முனீஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சூப்பர். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார்.

 

நடிகர் குரேஷி பேசுகையில், “டில்லி பாபு சாரிடம் வாய்ப்பு கேட்டேன். என்னை மதித்து அவர் கொடுத்த வாய்ப்பு இது. முனீஷ்காந்த், விஜயலட்சுமி நன்றாக நடித்துள்ளார்கள். ராதாரவி சார், கோடாங்கி என எல்லோரும் கலக்கி இருந்தார்கள். ‘மிடில் கிளாஸ்’ என்ற பெயருக்கு ஏற்ப பல விஷயங்கள் படத்தில் இருக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார்.

 

பாடகி சுப்லாஷினி பேசுகையில், “படத்தில் வாய்ப்பு கொடுத்த பிரணவ்வுக்கு நன்றி. வித்தியாசமான பாடலாக இருக்கும். இந்தப் பாடலுக்கும் படத்திற்கும் உங்கள் ஆதரவு தேவை.” என்றார்.

 

இயக்குநர் ராகவ் மிருதுத் பேசுகையில், “படத்தின் முதல் ஷாட் அருமையாக இருந்தது. பல பெரிய விஷயங்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற படங்கள்தான் நூறு கோடி வசூலிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா ஸ்டைல் மாறும். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வேண்டும்.” என்றார்.

 

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி பாஸ்கர் பேசுகையில், “டில்லி பாபு சார் மறைவுக்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் பிரணவ் பேசுகையில், “எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் துரை, தேவ், இயக்குநர் கிஷோருக்கு நன்றி. படத்தில் நிறைய விஷயங்கள் என்னோடு கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. என்னுடைய பெற்றோர், டெக்னீஷியன்ஸ், நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய குரு சந்தோஷ் நாராயணன், மீனாட்சி அக்காவுக்கு நன்றி. படம் 21 ஆம் தேதி வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், “’கர்ணன்’, ‘வாழை’, ‘பாரீஸ் ஜெயரஜாஜ்’, ‘ரெட்ரோ’ எனப் பல படங்களில் என்னுடைய பணியாற்றியுள்ளார் பிரணவ். ரொம்ப திறமையானவர். திபு நினன் தாமஸ், பிரணவ் என என்னுடைய அணியில் இருந்து அடுத்தடுத்து இசையமைப்பாளர்கள் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சி. படம் பெரும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துக்கள்” என்றார்.

 

தயாரிப்பாளர் தேவ் பேசுகையில், “எனக்கு எமோஷனலான தருணம் இது. டில்லி சார் ரொம்ப ஆசைப்பட்டு தொடங்கிய படம் இது. அவர் ஆசியுடன் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது. அவரின் மறைவுக்குப் பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி இருந்தது. ஆனால், அதற்கான ரூட் மேப் தெளிவாக டில்லி சார் வைத்திருந்தார். அதை துரை அண்ணா தெளிவாக செயல்படுத்தி வருகிறார். டில்லி சார் ஆசைப்பட்டதை கிஷோர் அண்ணா அழகாக திரையில் எடுத்து வந்துள்ளார். நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சரியாக தேர்வு செய்துள்ளார் இயக்குநர். முனீஷ்காந்த் அண்ணன் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவருக்கு நன்றி. அடுத்து நிறைய படங்கள் அவர் கதையின் நாயகனாக நடிக்க வேண்டும். விஜயலட்சுமி மேமின் நடிப்பு தீவிரமாக இருந்தது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை.” என்றார்.

 

நடிகை விஜயலட்சுமி பேசுகையில், “’மிடில் கிளாஸ்’ படத்தில் ரொம்பவே ரசித்து நடித்தேன். கிஷோருக்கு நன்றி. விஜியும் அன்புராணியும் எதிர் எதிர் துருவங்கள். இந்தக் கதைக்கு முனீஷ்காந்த் சார் தவிர வேறு யாரால் நடிக்க முடியும் எனத் தெரியவில்லை. அவருடன் நடித்தது மகிழ்ச்சி. நாங்கள் நினைத்ததை விட படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதற்குக் காரணம் டில்லி பாபு சாரின் ஆசீர்வாதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் கிஷோர் பேசுகையில், “இந்தக் கதையை பிடித்து ஒத்துக் கொண்ட டில்லி பாபு சாருக்கு நன்றி. முனீஷ்காந்த், விஜயலட்சுமி என எல்லோரின் கதாபாத்திரத்திற்கும் என்னிடம் ரெஃபரன்ஸ் உள்ளது. ராதாரவி சாரை புதுமையான கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள். காளிவெங்கட், வேலராமமூர்த்தி, குரேஷி என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு, இசை என தொழில்நுட்பக் கலைஞர்களும் ஈடுபாட்டோடு வேலை பார்த்தார்கள். ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ கதைகளை தாண்டிய ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கும். அடுத்து என்ன என்ற த்ரில்லோடு இந்தப் படம் இருக்கும். படத்தை நிச்சயம் தியேட்டரில் சென்று பாருங்கள்.” என்றார்.

 

நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது, “கிஷோர் சார் என்னிடம் நீங்கள்தான் ஹீரோ என்றார். நான் முடியாது என்றேன். கதை கேட்ட பிறகுதான் தெரிந்தது கதை தான் ஹீரோ என்று. உடனே ஒத்துக்கொண்டேன். இயக்குநர், தயாரிப்பாளர்கள், எடிட்டர், இசையமைப்பாளர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு நான் எதிர்பாராத பெரிய சம்பளம் டில்லி பாபு சார் கொடுத்தார். திறமைகளை மதித்து வளர்த்து விட்ட டில்லி பாபு சார் போன்ற பல தயாரிப்பாளர்கள் சினிமாவிற்கு தேவை. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

Related News

10754

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery