கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தனக்கு மிகவும் பிடித்த ஊர் கோயம்புத்தூர் என்றும் ஆண்டுக்கு பத்து முறை கோவைக்கு வந்து செல்லும் எனக்கு கோயம்புத்தூர் வந்தாலே மிகுந்த சந்தோஷம் என்றும் கூறினார். தற்போது தங்கம் விலையைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என கூறிய அவர்,நவம்பர் 21ஆம் தேதி தான் நடித்த மாஸ்க் திரைப்படம் வெளியாக உள்ளது படம் நன்றாக வந்துள்ளது ஜாலியான படம் என்பதால் அனைவரும் திரையரங்கில் வந்து படத்தை பாருங்கள் என வலியுறுத்தினார்.

தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை ஆண்ட்ரியா, நடிகர் விஜய் வந்தாலும் மகிழ்ச்சி தான் என்றும் அவர் தளபதி தானே என்றும் பதிலளித்தார்.
தொடர்ந்து கடைக்கு வெளியே ரசிகர்களை சந்தித்த பேசிய ஆண்ட்ரியா பின்னர் ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது...