Latest News :

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் படத்தில் நடிகை நயன்தாரா இணைந்தார்!
Wednesday November-19 2025

அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட  வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில்  மீண்டும் ஒரு புதிய படமான,  #NBK111 வரலாற்றுச் பின்னணியில் மாபெரும் படைப்பாக  உருவாகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

 

இப்போது படம் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — மகத்தான, வலிமையான ராணியின் அத்தியாயம் துவங்கியுள்ளது.

அழகும், கம்பீரமும் கலந்த நயன்தாரா, இந்த மாபெரும் வரலாற்றுப் படத்தில் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக, கதாநாயகியாக இணைந்துள்ளார். படத்தின் கதையில் முக்கியத்துவமிக்க, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ஸ்ரீ ராம ராஜ்யம் ஆகிய மூன்று படங்களுக்கு பிறகு, பாலகிருஷ்ணா–நயன்தாரா ஜோடி  நான்காவது முறையாக இணைவதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த அறிவிப்பு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.

 

அறிவிப்பு வீடியோவே பிரமிப்பை தருவதாக கண்களை கவரும் காட்சி அமைப்புடன்,படத்தின் பெருமையை உணர்த்துகிறது.

 

இப்பபடம் பற்றிய மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில்,  குதிரையில் வரலாற்று ராணியாக நயன்தாராவை அறிமுகப்படுத்தி, இயக்குநர் கோபிச்சந்து மலினேனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

முதல் முறையாக வரலாற்று படத்தில் களம் இறங்கும் இயக்குநர் கோபிசந்த் மலினேனி, தன் மாஸ் ஸ்டைலை இந்த பிரம்மாண்ட படைப்பிலும் வழங்கவுள்ளார். பெரும்பாலும் கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர்கள் வழங்கும் இவர், இம்முறை பாலகிருஷ்ணாவை இதுவரை காணாத புதிய கதாப்பாத்திரத்தில் வடிவமைக்கிறார். வரலாற்று பின்னணியில் எமோசனும் ஆக்சனும் கலந்த மிகப்பெரும் அனுபவத்தை, பிரம்மாண்ட காட்சிகளுடன் வழங்கப் போகிறது இந்த படம்.

 

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

Related News

10758

’மெல்லிசை’ படம் பற்றி மனம் திறந்த நடிகர் கிஷோர்!
Tuesday January-06 2026

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...

’பராசக்தி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday January-06 2026

டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில்,  சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...

ருக்மணி வசந்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு
Tuesday January-06 2026

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது...

Recent Gallery