Latest News :

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் தயாரிக்கும் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி!
Wednesday November-26 2025

நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ். இவர் தயாரித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் உலக பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றதோடு தேசிய விருதும் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘சூப்பர்ஹீரோ’ மற்றும் ‘நிஞ்சா’ ஆகிய படங்கள் தயாரிப்பில் பிஸியாக உள்ளார். 

 

நடிகர்கள், படக்குழுவினர், நலன் விரும்பிகள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் இன்று காலை (24 நவம்பர், 2025) படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர்கள் நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் 'சூப்பர்ஹீரோ' பட டைட்டிலையும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் ’நிஞ்சா’ பட டைட்டிலையும் வெளியிட்டனர். 

 

’சூப்பர்ஹீரோ’ படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் சாண்டி எதிர்மறை கதாபாத்திரத்திலும், ரெடின் கிங்ஸ்லி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இந்த படம் மூலம் சினிஷூடன் நீண்டகாலம் பயணித்தவரான விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். ’ஹிருதயம்’ மற்றும் வெளியாகவிருக்கும் ’ஒன்ஸ் மோர்’ படங்களில் பணியாற்றிய ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு தரமான இசையை கொடுத்திருக்கிறார். இந்த படத்தை கே.எஸ். சினிஷ் வழங்குகிறார் மற்றும் ஷாஞ்சன் ஜி உடன் இணைந்து தயாரிக்கிறார்.

 

’ஜமா’, ’வே டு ஹோம்’, மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ போன்ற தரமான படங்களைத் தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸின் எஸ். சாய் தேவானந்த் மற்றும் எஸ். சாய் வெங்கடேஷ்வரன் ஆகியோருடன் இணைந்து ’நிஞ்சா’ படத்தை தயாரித்து வழங்குகிறார் கே.எஸ். சினிஷ். இந்தப் படத்தை முருகா இயக்குகிறார். இந்தப் படத்தில் பாரத் கதாநாயகனாகவும், பிராத்தனா நாதன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

 

சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் மற்றும் நெல்சன் படத்தின் தலைப்பை வெளியிட, நிகழ்வில் நடிகர்கள் ஆர்யா, கவின், சந்தீப் கிஷன், ரியோ ராஜ், மிர்ச்சி சிவா, ரெடின் கிங்ஸ்லி, பிராங்க்ஸ்டர் ராகுல், கலையரசன் மற்றும் கௌஷிக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

இயக்குநர்கள் ரவிக்குமார், அபிஷன் ஜீவிந்த், கலை அரசன், சாம் ஆண்டன், டான் சாண்டி, ஸ்ரீ கணேஷ், ஆதிக் ரவிச்சந்திரன், பிஎஸ் மித்ரன், தமிழரசன் பச்சமுத்து, மடோன் அஷ்வின், ரத்தின சிவ விருமாண்டி, ’பேச்சுலர்’ சதீஷ், ராம்குமார் பாலகிருஷ்ணன், அஷ்வின் ராம், கார்த்திக், நித்திலன் சுவாமிநாதன் மற்றும் வினோத்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

 

மேலும், தயாரிப்பாளர்களான ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன் சாகர், சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா, எஸ்.கே. புரொடக்‌ஷன் கலை, ஸ்டோன் பெஞ்ச் கார்த்திக் மற்றும் கல்யாண், தயாரிப்பாளர் கே.வி. துரை மற்றும் தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் தேவா, எடிட்டர் பிலோமின் ராஜ், ஆக்‌ஷன் கோரியோகிராஃபர் திலீப் சுப்பராயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

’பலூன்’ திரைப்படம் இயக்கிய சினிஷ், தனது உதவி இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார். முன்னதாக ’டிக்கிலோனா’ படம் மூலம் கார்த்திக் யோகியையும், ’பார்க்கிங்’ படம் மூலம் ராமையும் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அந்த வரிசையில் இப்போது சோல்ஜர்ஸ் பிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் விக்னேஷ் வேணுகோபாலை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார்.

Related News

10772

முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாடகி மாலதி லக்‌ஷ்மண்!
Wednesday November-26 2025

இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...

பூரி ஜெகன்னாத் - விஜய் சேதுபதி கூட்டணி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Wednesday November-26 2025

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது...

முதல் முறையாக எனக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது! - நடிகர் ஹரிஷ் கல்யாண் மகிழ்ச்சி
Tuesday November-25 2025

ஐடிஏஏ புரொடக்‌ஷன்ஸ் (IDAA Productions) மற்றும் திங் ஸ்டுடியோஸ் (Think Studios) நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், இளம்  நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ’தாஷமக்கான்’...

Recent Gallery