விஜயின் ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய கே.பி.ஜெகன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.கே.செல்வகுமார் தயாரிக்கிறார்.
ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகளை மையமாக கொண்டு உருவாகும் இப்படம், வாழ்வின் வினோதங்களையும், அன்பையும் பேசும் படைப்பாகவும், அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான கமர்ஷியம் அம்சங்களோடும் உருவாகி வருகிறது.
இப்படத்தை இயக்கும் கே.பி.ஜெகன், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையின் நாயகனாக நடித்துள்ளார். தேசிய விருது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடித்துள்ளார். இவர்களுடன் அருள்தாஸ், கதிரவன் பாலு, அம்மு சாய், மோனிகா சந்தோஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்களாக பேபி தனுஷ்கா, இயக்குநர் கே பி ஜெகனின் மகன் மாஸ்டர் சபரிஷ், ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் , திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. சென்னை ஏ ஆர் எஸ் கார்டனில் கிளை சிறைச்சாலை செட் அமைத்து, படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் மணலி புதூர், சென்னை மேற்கு மாம்பலம், திருவேற்காடு ஆகிய இடங்களிலும் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
மாயாண்டி குடும்பத்தார் என்ற காலத்தால் அழியாத சிறந்த படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் டப்பிங் உள்ளிட்ட போஸ் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
சுகசெல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். மணிகண்டன் சிவகுமார் படத்தொகுப்பு செய்ய, வீரசமர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். கார்த்திக் நேத்தா, திரை வண்ணன், சக்தி (USA) ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது...