Latest News :

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 111 வது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது
Saturday November-29 2025

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப் பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ் ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார்.  ‘வீரசிம்ஹா ரெட்டி’ மூலம் வசூல் சாதனைகளை புரட்டி போட்ட பாலகிருஷ்ணா மற்றும் கோபிசந்த் மலினேனி கூட்டணி, இப்போது இன்னும் பிரம்மாண்டமான வரலாற்று களத்தில் மீண்டும் இணைகிறது.

 

இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான ’பெத்தி’ எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

 

அழகு நாயகி நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இப்படத்தில் இணைந்துள்ளார்.  ’சிம்ஹா’, ’ஜெய் சிம்ஹ’ , ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா – நயன்தாரா இணையும் நான்காவது படம் இதுவாகும். 

 

ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாபெரும் பூஜை விழாவினைத் தொடர்ந்து,  இப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

 

ஆந்திர பிரதேச அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார் திரைக்கதை நகலை தயாரிப்பாளர்களிடம் வழங்கினர். பாலகிருஷ்ணாவுடன் பல வெற்றி படங்களை இணைந்து வழங்கிய இயக்குநர் B. கோபால் க்ளாப் அடிக்க, பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வினி கேமராவை ஸ்விட்ச் ஆன் செய்தார். முதல் ஷாட்டை போயபாடி ஶ்ரீனு, பாபி, புச்சி பாபு ஆகியோர் இணைந்து இயக்கினர். பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு  சேர்த்தனர்.

 

மகத்தான மன்னனின் எழுச்சியை போர்க்களமே வணங்கும் தருணம் இது. வரலாற்றை குலுக்கும் இந்த கர்ஜனை புதிய அத்தியாயத்தை எழுத வருகிறது.

 

மாஸ் எலிவேஷன் மற்றும் அதிரடி கதைக் கட்டமைப்பில் பிரசித்தமான கோபிசந்த் மலினேனி, முதல் முறையாக வரலாற்று படத்தில் களம் இறங்குகிறார். நந்தமூரி பாலகிருஷ்ணாவை ரசிகர்கள் இதுவரை காணாத ஒரு புதிய, ஆச்சரியமான அவதாரத்தில் காட்சிப்படுத்தும் விதமாக,  இந்தக் கதை உருவாகிறது.

 

சிறப்பு போஸ்டரில், நீண்ட முடி, பூரண தாடி, வாள் மற்றும் நங்கூரத்தைத் தாங்கி, அரச கம்பீரத்துடன் நிற்கும் அதிபதியாக பாலகிருஷ்ணா மிளிருகிறார்.

 

வரலாற்று பின்னணியில் எமோசனும் ஆக்சனும் கலந்து,  பிரம்மாண்ட காட்சிகளுடன் ஒரு எபிக் அனுபவத்தை, வழங்கப் போகிறது இந்த படம்.

 

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

Related News

10778

ஜி.வி. பிரகாஷ் குரலில் திருவாசகம் முதல் பாடல் 22 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday January-20 2026

தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...

’அறுவடை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Tuesday January-20 2026

இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...

அமேசான் மியூசிக் குளோபல் 2026 ஆர்டிஸ்ட்ஸ் டு வாட்ச் பிரச்சாரத்தை துவங்கியது
Tuesday January-20 2026

அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த  ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக,  2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய  தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க  கலைஞர்கள்”   வருடாந்திர பட்டியலை  இன்று அறிவித்துள்ளது...

Recent Gallery