Latest News :

என் ரசிகர்களிடம் பாஸிடிவிடியை பரப்பவே நினைக்கிறேன் - நடிகர் சிவகார்த்திகேயன்
Tuesday December-02 2025

ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சாம்பியனும், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவருமான குகேஷ், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் திரு.சரவணன் கனகராஜு மற்றும் திரு.ஸ்ரீனிவாசன் பாபு உள்ளிட்டோர் பங்குபெற்று சிறப்பித்தனர். 

 

தன்னுடைய வசீகரமான நடிப்பால் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் இந்த தளத்தை தொடங்கி வைத்தது பொழுது போக்கு செயலிகள் மற்றும் இணையதளத்தில் புதிய உற்சாகத்தை வழங்கியுள்ளது. 

 

ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் என்பது இதுவரை இல்லாத அளவில் நட்சத்திரங்களை அவர்களின் ரசிகர்களோடு ஒருங்கிணைக்கும் தளமாகும்.செயலிகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தொடக்கம், ஒரே இடத்தில் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்கள் மற்றும் நாயகிகள் ஒரே தளத்தில் இணைப்பதோடு,  பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

 

தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதையில், இன்றைய டிஜிட்டல் உலகம் போலி செய்திகளையும், போலி கணக்குகளையும்  வழங்கி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் அவற்றிற்கு மாற்றாக,  ஏமாற்றத்தை வழங்காமல், ரசிகர்கள் முழுக் கொண்டாட்டத்தையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் பாதுகாப்பான இடத்தை வழங்குவதை ஃபேன்லி தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இந்த தளத்தின் முதல் நட்சத்திரமாக, மக்களின் மனதில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள தமிழ் சினிமாவின் ஐகானிக் ஸ்டார், சிவகார்த்திகேயனை இணைப்பதில் ஃபேன்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. மேலும் பல நட்சத்திரங்கள் இந்த தளத்தில் விரைவில் இணைய உள்ளனர். ரசிகர்கள் ஃபேன்லி செயலியை ஆப் ஸ்டோர் அல்லது பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

 

இந்தியாவின் முதன்மையான பொழுதுபோக்கு வடிவங்களில் முக்கிய இடம் பிடித்துள்ள சினிமாவிற்கு தற்போதுவரை, சமூகத்தை உணமையாக இணைக்கும் பிரத்யேக டிஜிட்டல் தளம் இல்லை என்று தெரிவித்த இந்த செயலியின் நிறுவனர்களான சரவணனன் கனகராஜு மற்றும் ஸ்ரீனிவாசன் பாபு ஆகியோர்,  ஃபேன்லி செயலி மூலம், ரசிகர்கள் திரை நட்சத்திரங்களுடன் முன்னெப்போதும் இல்லாத அனுமதியைப் பெறுகின்றனர். அதே நேரத்தில் நட்சத்திரங்கள் தங்கள் தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வளர்க்க இந்தச் செயலி மூலம் அதிகாரம் அளிக்கிறார்கள்.  நீங்கள் ஒரு தேசிய நட்சத்திரமாக இருந்தாலும், மாநில நட்சத்திரமாக இருந்தாலும், அல்லது தொழில்துறையை நேசிக்கும் ஒருவராக இருந்தாலும், ஃபேன்லியின் பொழுதுபோக்கு தளம் உங்கள் ரசிகர்களின் ஈடுபாட்டை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ள இடமாகும். 

 

Fanly App Launch

 

ஃபேன்லி ஆப்பின் சிறப்பம்சங்கள் இதனை இன்னும் மேன்மைப்படுத்துகின்றன. அவை, நட்சத்திரங்கள் பிரத்யேக தகவல்களைப் அந்த செயலி மூலம் பகிர்ந்து கொள்வார்கள். தனிப்பட்ட புதிய தகவல்களை அனுப்புவார்கள் மற்றும் தனிப்பட்ட ரசிகர் நிகழ்வுகளை நடத்துவார்கள்.

 

ரசிகர்களும், ரசிகர் மன்றங்களுடனான தொடர்பை இந்த செயலி மூலம் பெறுவார்கள். பிரத்யேக முழக்கங்களைப் பகிரவும், சிறப்புத் தயாரிப்புகளை வாங்கவும், மேலும் நேர்மறையான செயல்பாடுகளுக்கு பரிசுகளையும் இந்த செயலிமூலம் பெறுவார்கள். 

 

ஃபேன்லியின் முதன்மை  AI கருவியான செண்டி’மீட்டர் (senti'meter) , ஆக்கபூர்வமான பின்னூட்டங்கள்/விமர்சனங்களை கட்டுப்படுத்தாமல் உள்ளடக்கத்தை மிதப்படுத்துவதன் மூலம் ஒரு மரியாதைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் நேர்மறையை வெகுமதி அளிக்கிறது.

 

பாரம்பரிய சமூக தளங்களின் கூச்சல்களுக்கு அப்பால் பிரபலங்களும் ரசிகர்களும் அர்த்தமுள்ள, கருத்துப் பரிமாற்றம் செய்யும்  உறவுகளை உருவாக்கும், பாதுகாப்பான, தொகுக்கப்பட்ட இடமாக ஃபேன்லி ஆப் செயல்படும். 

 

கிளவுட் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஃபேன்லி ஆப்  வரையறுக்கப்பட்ட  மற்றும் தடையின்றி ஒருங்கிணைக்கூடிய -பொழுதுபோக்கின் எதிர்காலத்திற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. 

 

இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “கோபிசந்த் சார் இது எனக்கு பெரிய மரியாதை, நீங்கள் எவ்வளவு பேரை முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கிறீர்கள், எத்தனை விசயங்களை செய்கிறீர்கள் என எனக்குத் தெரியும், உங்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி.  மணிகண்டன் சார் நீங்கள் பேசியது மிக அருமையாக இருந்தது. நீங்கள் என்னை அண்ணா என அழைத்தார் தான் வருத்தம். எனக்கு டெக்னாலஜி பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனக்கு லேப்டாப் தந்தால் அதில் கீபோர்டில் ஒவ்வொரு எழுத்தையும் தேடுவேன். நான் மொபைலில் பாஸ்வேர்ட் எல்லாம் மறந்திருக்கிறேன், ஆனால் நீங்கள் டெக்னாலஜியில் கில்லாடி. அதனால் இதை சாதித்துள்ளீர்கள். உலக சாம்பியன் குகேஷ் உங்களுடன் இணைந்து இந்த மேடையை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. 

 

Fanly என்பதை கேட்கும்போது ஃபேமிலி எனத்தான் கேட்கிறது. அவ்வளவு அழகான பெயரைத் தேடி வைத்திருப்பது அருமை. ரசிகர்களிடம் நெகட்டிவிட்டியைத் தவிர்த்து பாஸிடிவான விசயங்கள் பரப்பும் இதன் நோக்கம் அருமை. நான் எப்போதும் என் ரசிகர்களிடம் பாஸிடிவிடியை பரப்பவே நினைக்கிறேன். என்னை வணங்கும் ஃபேன்ஸ் வேண்டாம், என்னை ரசிக்கும் ஃபேன்ஸ் தான் வேண்டும்,  அதனால் தான் அவர்களை எப்போதும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என அழைக்கிறேன், அதே போல் இந்த ஆப்பும் பாஸிடிவான விசயங்களை தேடி தருவது அருமை. எனக்கு எல்லா சோஷியல் மீடியாவிலும் அக்கவுண்ட் இருக்கிறது, ஆனால் அதை வேறொருவர் தான் பார்த்துக்கொள்கிறார்கள். நான் இன்ஸ்டா பக்கம் போனால்,  ஸ்வைப் செய்தால் ஏதாவது ரீபோஸ்ட் ஆகி பிரச்சனை ஆகிவிடுகிறது. அதற்கு பயந்து நான் எதையும் பயன்படுத்துவதில்லை.  இன்றைய கட்டத்தில் நெகட்டிவான செய்திகள் தான் அதிகம் பரவி, ஒரு மோசமான நிலைமை நிலவுகிறது. அதை  மாற்றி நல்ல விசயங்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய ஆப்பை உருவாக்கியிருக்கும் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.  எனக்கு இது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இது நடந்தால் நான்  மீண்டும் சோஷியல் மீடியா பக்கம் வரலாம்.  

 

ஒரு  ரசனை சார்ந்த ஒரு கூட்டம் ஒரு விசயத்தை பேசும் கூட்டம், உதாரணமாக பேட் மிட்டன் பிடிப்பவர்கள் மட்டும் பேசிக்கொண்டால் அந்த இடமே மிக நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அதை முன்னெடுத்திருக்கும் Fanly குழுவிற்கு வாழ்த்துக்கள். அனிருத் இந்த ஆப்பில் வரவேண்டும் என நான் நினைக்கிறேன். அவர் இசையை ரசிப்பவர்கள், அவர் ரசிகர்கள் மட்டும் இருக்கும் குழுவில் இந்த ஆப் மூலம் அவரது இசையை பகிரும் ரசிக்கும் பெரிய தளம் கிடைக்கும்.  அதை அவரிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். இந்த புதிய ஆப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி.” என்றார்.

 

Link to App store: https://apps.apple.com/in/app/fanly/id6532619926

Link to Google store: https://play.google.com/store/apps/details?id=com.fanly

Website : https://fanly.social/

Related News

10782

டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் ‘மகாசேனா’!
Tuesday December-02 2025

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’...

மழையில் பாதித்தவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பி.டி.செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Monday December-01 2025

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி...

கவனம் ஈர்க்கும் ‘ப்ராமிஸ்’ பட முதல் பார்வை!
Saturday November-29 2025

ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும்...

Recent Gallery