Latest News :

100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்த ‘ரேகை’ தொடர்!
Tuesday December-02 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

 

பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம்  உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர்  தினகரன்.எம், இந்த தொடரை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.எஸ்.குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ்.சிங்காரவேலன் தயாரித்திருக்கும் இந்த தொடரில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம்.எம், அஞ்சலி ராவ், இந்திரஜி.இ ஆகியோர் நடித்துள்ளனர். 

 

உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?

 

S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார். அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில்  அவரை இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு தேடலும், அதன் பதிலும், இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி நம்மை அந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறது. 

 

Regai

 

தமிழில் வெளியாகும் க்ரைம் கதைகளிலிருந்து மாறுபட்டு,  ஒரு  வித்தியாசமான திரில்லர் சீரிஸாக, கதைக்களத்திலும், உருவாக்கத்திலும்  புதுமையான அனுபவம் தரும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும்  பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. 

 

ZEE5 தமிழ் பாரவையாளர்களுகென தொடர்ந்து தனித்துவமான, மண் சார்ந்த சிறப்பான படைப்புகளை, பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான ’சட்டமும் நீதியும்’ தொடர் மற்றும் ‘மாமன்’ திரைப்படம்,  மக்களின் பேராதாரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related News

10784

டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் ‘மகாசேனா’!
Tuesday December-02 2025

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’...

என் ரசிகர்களிடம் பாஸிடிவிடியை பரப்பவே நினைக்கிறேன் - நடிகர் சிவகார்த்திகேயன்
Tuesday December-02 2025

ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு...

மழையில் பாதித்தவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பி.டி.செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Monday December-01 2025

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி...

Recent Gallery