பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எப்போதும் பிஸியாக இருக்கும் ஓவியா, கடை திறப்பு, கல்லூரி நிகழ்ச்சிகள் என்று மறுபுறமும் அமர்க்களமாக கல்லா கட்டி வருகிறார். அதே சமயம் பல படங்களில் அவர் நடித்து வருவதாக வெளியாகும் தகவல்களை மறுத்துள்ள ஓவியா, காஞ்சனா 3 படத்தில் நடிக்க மட்டுமே ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
இதற்கிடையே, கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த ஓவியா, ”தனக்கு விஜய், அஜித் என்று இருவரையும் பிடிக்கும். இருவரும் மாஸ் தான். அவர்களுடன் மற்ற நடிகர்களையும் பிடிக்கும்.
இருந்தாலும், அஜித்துடன் நடிக்க எனக்கு ரொம்பவே ஆசை. அவரது படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு வேலைக்காரி வேடமாக இருந்தாலும் நடிக்க நான் ரெடி. அஜித் படத்தில் நடிக்க எது வேண்டுமானாலும் நான் செய்வேன்.” என்று கூறியுள்ளார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...