Latest News :

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் ‘ஓ...!சுகுமாரி’!
Sunday December-07 2025

சமீபத்திய ’ப்ரீ வெட்டிங் ஷோ’ ( Pre Wedding Show ) படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, இளம் நடிகர் திருவீர், மற்றும் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெறர சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில்  அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,  ஆகிய  இருவரும்  இணைந்து ஒரு அட்டகாசமான  ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் ( Bharat Dharshan) இயக்குகிறார்.  கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி (Maheswara Reddy Mooli) தயாரிக்கிறார்.  ‘புரொடக்ஷன் நம்பர்  2 ’-வாக இப்படம் உருவாகிறது. சிவம் பஜே ( Shivam Bhaje ) வெற்றிக்குப் பிறகு, இந்த நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.

 

படத்தின் தலைப்பு ‘ஓ சுகுமாரி’ என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள டைட்டில் அறிவிப்பு  போஸ்டர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீல நிற இதயத்தை எழுதியபடி அதனை இரண்டு பாகங்களாகப் பிளக்கும் ஆரஞ்சு மின்னல் குறியீடு, பின்னணியில் பெரிய ஆலமரம், கிராம சூழல், ஓடிக்கொண்டிருக்கும் கிராமவாசிகள்,  இவை அனைத்தும் சேர்ந்து இப்படம் காதல், எமோசன், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட கதை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

 

இந்த படத்திற்காக திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ரசாகர் (Razakar) மற்றும் பொலிமேரா (Polimera,) போன்ற படங்களில் பணியாற்றிய C. H. குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். M. M. கீரவாணியின் நெருங்கிய துணை இசையமைப்பாளராக பணியாற்றிய பரத் மஞ்சிராஜு ( Bharath Manchiraju) இப்படத்திற்கு இசையமைக்கிறார். பலகம் புகழ் திருமாலா M. திருப்பதி கலை இயக்குநராக இணைந்துள்ளார். கா படத்தின் ஸ்ரீ வரப்ரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். ஸ்வயம்பு படத்தில் பணியாற்றி வரும் அனு ரெட்டி அக்கட்டி உடை வடிவமைப்பை கவனிக்கிறார். பிரபல பாடலாசிரியர் பூர்ணசாரி இந்த படத்திற்கான பாடல் வரிகளை எழுதுகிறார்.

 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.  இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.

Related News

10790

மதுபாலா - இந்திரன்ஸ் நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை' படத்தின் 2வது போஸ்டர் வெளியானது
Sunday December-07 2025

இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...

’த்ரிஷ்யம் 3’ திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ்
Sunday December-07 2025

மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...

’அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் ஐமேக்ஸ் முன்பதிவு தொடங்கியது!
Sunday December-07 2025

இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன...

Recent Gallery