Latest News :

ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று வெளியாகும் ‘படையப்பா’!
Sunday December-07 2025

நடிகர் ரஜினிகாந்தின் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி,  அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ’படையப்பா’ திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன்,  மீண்டும் திரைக்கு வருகிறது.

 

ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார்.  அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான ’படையப்பா’ படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது.

 

1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான ’படையப்பா’ படத்தில் ரஜினிகாந்துடன், சிவாஜி கணேசன் இணைந்து நடித்திருந்தார். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ்,  என பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்தனர். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் , கே. சத்திய நாராயணா, எம். வி கிருஷ்ணா ராவ் மற்றும் கே விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்தனர். இணை தயாரிப்பாளராக பி. எல். தேனப்பன் பணியாற்றினார்.

 

1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியான ’படையப்பா’ படம் அன்றைய  காலகட்டத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து,  இந்தியளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

 

பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இப்படம் தற்போதைய டெக்னாலஜியில் 4K தரத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன்,  புத்தம் புது பொலிவுடன்,  ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

10791

மதுபாலா - இந்திரன்ஸ் நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை' படத்தின் 2வது போஸ்டர் வெளியானது
Sunday December-07 2025

இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...

’த்ரிஷ்யம் 3’ திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ்
Sunday December-07 2025

மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...

’அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் ஐமேக்ஸ் முன்பதிவு தொடங்கியது!
Sunday December-07 2025

இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன...

Recent Gallery