இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியர் அவருடைய சமூக ஊடக பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஜித் பாபுஜி தயாரித்திருக்கிறார். பெரும் பாராட்டைப் பெற்ற 'எண்டே நாராயணனுக்கு' எனும் குறும் படத்திற்கு பிறகு இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கியிருக்கும் திரைப்படம் இது. மேலும் இந்தப் படத்தின் மூலம் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை மதுபாலா கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்து மலையாள திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார்.
மதுபாலா உடன் தனித்துவமான நடிப்புத் தருணங்களுக்காக பெயர் பெற்ற நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடிப்பார் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் வர்ஷா வாசுதேவ் எழுதியிருக்கிறார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இதய பூர்வமான இசையமைப்பின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டார். வாரணாசியில் முழுவதுமாக படமாக்கப்பட்ட இந்த திரைப்படம்- 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும்.
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...
இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன...
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம்...