Latest News :

விக்ரம் செய்த துரோகம் - ‘சாமி 2’ வில் இருந்து விலகிய திரிஷா
Tuesday October-24 2017

கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

 

ஹரி இயக்கத்தி விக்ரம் நடிக்கும் இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிப்பதுடன், அவருடன் கீர்த்தி சுரேஷும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இவர்களுடன் பாபி சிம்ஹா, சூரி, பிரபு ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், இப்படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டார். இதை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து விசாரித்தததில், இப்படத்தில் திரிஷா ஒரு நாயகி என்றாலும், அவரது கேரக்டர் ஒப்புக்கே வைக்கப்பட்டுள்ளதாம். ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் வருபவரை வில்லன்கள் கொன்றுவிட, கீர்த்தி சுரேஷ் தான் படம் முழுவதும் வருவது போல இயக்குநர் ஹரி கதை அமைத்துள்ளாராம். திரிஷாவிடம் கதை சொல்லும் போது அவரை ஹீரோயினாக வைத்து கதை சொல்லிய இயக்குநர் ஹரி, படப்பிடிப்பு தொடங்கிய பிறகு காட்சிகளை படமாக்கிய போது, தான் டம்மியாக்கப்பட்டதை அறிந்துக்கொண்ட திரிஷா, தனதுக்கு இயக்குநர் ஹரி செய்த துரோகத்தை விக்ரமிடம் சொல்ல, அவர் காது கொடுத்து கேட்கவில்லையாம்.

 

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் திரிஷா, இதுபோன்ற ஒப்புக்கு ஜப்பானி கேரக்டரில் நடித்தால், தொடர்ந்து இதேபோன்ற வேடங்களில் நடிக்க சொல்வார்கள் என்பதால், ‘சாமி 2’ படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.

Related News

1080

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery