சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், டாக்டர் சிவராஜ்குமார், உபேந்திரா, நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘45:த மூவி’. அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைத்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் போஸ்டர், டீசர், மற்றும் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ‘45: த மூவி’ படத்தின் கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் டிரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக படக்குழு அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 15 ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகியோரின் புதுமையான லுக்குகளை மையப்படுத்திய அறிவிப்பு போஸ்டர் — படத்தின் மர்மத்தையும் ஆர்வத்தையும் பலமடங்கு கூட்டுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மிகப்பெரிய ரிலீஸிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்களான டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா ஆகியோர் வடிவமைத்த அதிரடி காட்சிகள், சத்யா ஹெக்டேவின் கவர்ச்சியான ஒளிப்பதிவு, கே.எம். பிரகாஷின் துல்லியமான எடிட்டிங் ஆகியவை படத்தின் தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றன. அனில் குமார் எழுதிய வசனங்களும் ஜானி பாஷா அமைத்துள்ள ஆற்றல்மிக்க நடனக் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் வலிமையைக் கூட்டுகின்றன.
பிகைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ...
இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான புதிய தளம் ‘இந்தியன் பிலிம் மார்க்கெட்’ (INDIAN FILM MARKET)...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்...