Latest News :

ஜீ5 தளத்தின் புதிய இணையத் தொடர் ‘ஹார்டிலே பேட்டரி’ 16 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Thursday December-11 2025

தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் இணையத் தொடரை ஜீ5 (ZEE5) வழங்குகிறது. நவீன காதலை புதிய கோணத்தில் ஆராய்கிறது. தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும்  இந்த சீரிஸை  சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர்.

 

‘ஹார்டிலே பேட்டரி’  சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள். தனது பெற்றோர் உட்படப் பலர் அனுபவித்த தோல்வியுற்ற உறவுகளைப் பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.தனது 16 வயதில், காதலின் உண்மைத்தன்மையை அறிவியல் ரீதியாக அளவிடும் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்ற கனவை ஆரம்பிக்கிறாள்.

24-வயதில், அந்த கனவை நனவாக்குகிறாள். ஆனால் அப்போது அவள் சந்திப்பது சித் என்ற காமிக் ரைட்டரை. சோஃபியாவின் கண்டுபிடிப்பு முற்றிலும் அர்த்தமற்றது என்று நினைக்கும் மனிதன் அவன். அறிவியல் இதயத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? காதலின் மொழியை அறிவியல் மொழிபெயர்க்க முடியுமா? என்பதைக் கேட்கும் ஒரு இனிமையான, சுவாரஸ்யமான பயணம் இதுவாகும்.

 

நடிகர் குரு லக்ஷ்மன் கூறுகையில், “சித் கதாப்பாத்திரம் உணர்வுகள், உள்ளுணர்வு, காதலின் மாயாஜாலம் போன்றவற்றில் ஆழமான நம்பிக்கை கொண்ட இளைஞன். இந்த கதாபாத்திரம் எனக்குள் உள்ள நகைச்சுவையும் நெகிழ்வையும் வெளிக்கொணர உதவியது. ‘ஹார்டிலி பேட்டரி’ ஒரு சாதாரண காதல் கதை அல்ல; மனது உண்மையில் என்ன விரும்புகிறது என்பதை ஆராயும் ஒரு பயணம். ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.” என்றார்.

 

பாதினி குமார் கூறுகையில், “சோஃபியா ஒரு அற்புதமான கதாபாத்திரம்—தன்னம்பிக்கை மிக்க, புத்திசாலி, காதலை அறிவியலால் புரிந்துகொள்ளலாம் என்று நம்பும் பெண். ஆனால் அவளின் உள்ளுக்குள் உணர்வுகளுக்குள் சிக்கித் தவிப்பவள். இந்த கதாபாத்திரத்தை நடித்தது சவாலானதாகவும் நிறைவானதாகவும் இருந்தது.” என்றார்.

 

ZEE5 தமிழ் மற்றும் மலையாளம் பிசினஸ் ஹெட் மற்றும் SVP மார்க்கெட்டிங் சவுத் லாய்டு சி சேவியர் கூறுகையில், “‘ஹார்டிலே பேட்டரி’ அறிவியல் மற்றும் உணர்வுகளுக்கு  இடையேயான மோதலையும் ஒற்றுமையையும் அழகாகப் படம் பிடித்துள்ளது. புதிய கதைக்களங்களையும் உணர்ச்சிமிக்க காட்சிப்படுத்தல்களையும் தமிழ் ரசிகர்கள் எப்போதும் வரவேற்றுள்ளனர். இந்த சீரிஸில் இருக்கும் புதுமையும், உணர்வுகளும் ஒருங்கிணைந்து, இதயத்தைத் தொடும் ஒரு அனுபவத்தை வழங்கும்.” என்றார்.

 

டிசம்பர் 16 முதல் ZEE5-ல் ‘ஹார்டிலே பேட்டரி’ சீரிஸை ரசிக்கத் தவறாதீர்கள்!

Related News

10805

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery