Latest News :

’கிராண்ட் பாதர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Thursday December-11 2025

யுடியூப் மூலம் பிரபலமாகி, சில திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். அவர் இயக்கி நடிக்கும் முதல் படத்திற்கு ‘கிராண்ட் பாதர்’ (GRAND FATHER) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அவருடன் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் ஃபேண்டசி, ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான திகில் மற்றும் நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது.

 

ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், தெலுங்கு நடிகர் சுனில்,  ஸ்மீகா, அருள்தாஸ் , முனீஸ்காந்த் , ஸ்ரீநாத் , சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

 

மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இரண்டு பேர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் யார் ? என்பதை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. திரைப்படத்தில் அந்த ரகசியம் தெரிய வரும் போது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக   45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தை அறிவித்த வேகத்தில், குறுகிய காலகட்டத்தில்  முழு படப்பிடிப்பையும் முடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது படக்குழு.

 

சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ள  இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க,  கலை இயக்கத்தை பிரேம் மேற்கொண்டுள்ளார்.‌ ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

 

குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி பெரும் பொருட்செலவில் மிக தரமான ஒரு படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

 

இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் தனது எளிமையான, அனைவரும் கொண்டாடும்  பிராங் வீடியோக்கள் மூலம் மக்களின் மனதை வென்றுள்ளார். அந்த வீடியோவைப் போலவே அதே நேர்மையும் உண்மையும் கொண்டு உருவாக்கப்படும் அவரது முதல் படம் ’கிராண்ட் பாதர்’ படமும்  பார்வையாளர்களுடன் ஆழமாக இணைந்து, பலரது இதயங்களில் ஒரு தனித்த இடத்தைப் பெறும்.

 

இளம் தயாரிப்பாளரான புவனேஷ் சின்னசாமி, இளம் இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்து தகவல்கள் விரைவில்  அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Related News

10807

முதல் முறையாக ஒரே படத்தில் ஐந்து பாடல்கள் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்!
Thursday December-11 2025

பிகைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ...

சினிமா தொழிலில் புதிய முயற்சி ‘இந்தியன் பிலிம் மார்க்கெட்’!
Thursday December-11 2025

இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில்  உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான  புதிய தளம் ‘இந்தியன் பிலிம் மார்க்கெட்’ (INDIAN FILM MARKET)...

’அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
Thursday December-11 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்...

Recent Gallery