திரைப்பட மற்றும் டிவி தொடர் நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே தாடி பாலாஜி குடித்துவிட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக நித்யா போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க, தாடி பாலாஜியோ நித்யா தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு தன்னை மிரட்டுவதாக புகார் அளித்தார்.
மேலும், தாடி பாலாஜி தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, போலீசார் நித்யாவிடம் நடத்திய விசாரணையில் அவர் தனது ஆண் நண்பருக்கு செல்போன் பரிசாக வழங்கியது தெரிய வந்தது. ஆனால், இதை மறுத்த நித்யா, பாலாஜி நடிகர் என்பதால் போலீஸ் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக் புகார் கூறியதோடு, தான் தற்கொலை செய்துக்கொள்வேன் என்றும் மிரட்டினார்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் அண்ணாநகரில் உள்ள போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் போலீஸ் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் விசாரணை நடத்தினார். இது சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. அப்போது தாடி பாலாஜியுடன் அவரது வழக்கறிஞர் உடன் இருந்தார்.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...