தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர். கதை தேர்வில் மிக கவனமாக இருக்கும் விக்ரம் பிரபுவின் 25 வது படமாக வெளியாகிறது ‘சிறை’.
கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது அவர் நடிக்கும் நான்காவது போலீஸ் வேடம் என்றாலும், ஒவ்வொரு வேடத்திற்கும் நடிப்பு மற்றும் உடல் மொழி மூலம் வித்தியாசத்தை காட்டி நடிப்பதால் அவர் எத்தனை முறை போலீஸாக நடித்தாலும், அது புதிதாகவே இருக்கிறது. அந்த வகையில், ‘சிறை’ படத்தில் புதுவிதமான போலீஸ் விக்ரம் பிரபுவை பார்க்கலாம்.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘சிறை’ படம் குறித்தும் நடிகர் விக்ரம் பிரபு கூறுகையில், “’சிறை’ எனது 25 வது படமாக வெளியாவது மகிழ்ச்சி. உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் நான் போலீஸாக நடித்திருந்தாலும், என் தோற்றம் மற்றும் நடிப்பில் பெரிய வித்தியாசத்தை பார்ப்பீர்கள்.
இயக்குநர் தமிழ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தான் இந்த கதையை எழுதியிருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்து தான் இந்த படத்தில் நடித்தேன், அவர் சொன்னது போலவே படம் நன்றாக வந்திருக்கிறது. இயக்குநர் சுரேஷ், தமிழை விட சீனியர். இயக்குநர் வெற்றிமாறனிடம் நீண்ட வருடங்களாக இணை இயக்குநராக பணியாற்றியவர், அவரது அனுபவம் இந்த கதையை மிக நேர்த்தியாக கையாள வைத்திருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித குமார் மகன் எல்.கே.அக்ஷய் குமார், நன்றாக நடித்திருக்கிறார். மிக ஆர்வமாக இருக்கிறார், படத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறார். சில அனுபவங்களை அவர் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட போது, இதை விட அதிகமாக நான் கஷ்ட்டப்பட்டிருக்கிறேன், இதை விட இன்னும் அதிம இருக்கும், என்று கூறினேன். அவர் அறிமுக நடிகர் போல் அல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்.” என்றார்.
’சிறை’ படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியலை உணர்ந்து நடித்தீர்களா ? அல்லது இயக்குநர் சொன்னதை மட்டும் செய்தீர்களா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த விக்ரம் பிரபு, “இயக்குநர் தமிழ் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்பதால், என் கதாபாத்திரத்தை சொன்ன போது, நான் தமிழின் உடல் மொழியை தான் பின்பற்றினேன். அவரிடம் இருந்து இந்த கதாபாத்திரத்திற்காக சில விசயங்களை எடுத்துக் கொண்டேன், அதை வைத்து இயக்குநர் சொன்னதை வைத்து நடித்திருக்கிறேன். நிச்சயம் இந்த கதாபாத்திரம் எனக்கும், ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்.” என்றார்.
தொடர்ந்து வெவ்வேறு கதைக்களங்களில் நடிப்பது ஏன் ?, என்ற கேள்வி “கிரைம் திரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்தால், இப்படியே நடிப்பது ஏன் ? என்ற கேள்வி வருகிறது, அதை மாற்றினால், அது உங்களுக்கு நன்றாக இருக்குமே, என்று சொல்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும், அனைத்து கதைக்களங்களிலும் நடிக்க வேண்டும். காரணம், அனைத்தும் நடிப்பு தான், அனைத்தும் கதாபாத்திரங்கள் தான். அதனால், நான் வெவ்வேறு ஜானர்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதோடு, வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும், என்று முடிவு செய்துவிட்டேன்.” என்றார்.
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...