Latest News :

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு.ஏ, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பருத்தி’. கோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் நடிகர் கோதண்டம் பேசுகையில், “பருத்தி நல்ல படம். இப்படத்தை முழுக்க கஷ்டபட்டு எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் லட்சு கணேஷ் பேசுகையில், “பருத்தி படத்தை படக்குழு மிகச்சிறப்பாக எடுத்துள்ளனர். படத்தில் நடித்த சோனியா அகர்வால் முதலாக அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் குரு.ஏ பேசுகையில், “என் முதலாளி கோதண்டம்,  லட்சு கணேஷ் இருவரும் கதை சொன்ன உடனே, எப்போது ஷீட்டிங் போகலாம் என்று கேட்டனர். எனக்கு முழு ஆதரவு தந்து இப்படத்தை எடுத்ததற்கு இருவருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த குழந்தை தயாரிப்பாளரின் குழந்தை. அவர்கள் இருவருக்கும் உள்ள நட்பை இப்படத்தில் பேசியுள்ளேன். சின்ன வயதில் குழந்தைகள் மனதில் சாதி எனும் விதையை விதைக்கக் கூடாது என பேசியுள்ளோம். பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் குகன் சக்கரவர்த்தி பேசுகையில், “பருத்தி படம் எடுக்கும் முன்பிருந்தே இயக்குநரைத் தெரியும், அவர் நல்ல நடிகர் நன்றாக பேசுவார், அவர் நல்ல இயக்குநர். பருத்தி படத்தின் மிகப்பெரிய தூண் சோனியா அகர்வால், அவருக்கு இப்படம் மூலம் பெரிய வெற்றி காத்திருக்கிறது. இப்படம் அனைவருக்கும் வெற்றியைத் தர என் வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகர் பிரஜின் பேசுகையில், “சின்ன முயற்சிகளே பெரிய மரமாகும். குரு சாரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். நன்றாக பேசுவார். அவர் நல்ல நடிகர் எனக்கு கதை சொல்லியிருக்கிறார். அவர் இன்று இருக்கும் நல்ல இயக்குநர்களின் லிஸ்டில் இடம் பிடிப்பார். அவருக்கு மிகச்சிறப்பான இடம் கிடைக்கும். சோனியா மேடம் இன்றும் பார்க்க அப்படியே இருக்கிறார். இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

எஸ்.ஜி.ஆர் பிலிம் பேக்டரி சார்பில் ஶ்ரீதர் பேசுகையில், “நான் இயக்குநர் குழுவில் இருப்பவன் தான். நண்பனோட பயணத்தில் நானும் இருக்க வேண்டுமென நான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறேன். இது மாதிரி நல்ல படைப்புகளை SGR Film Factory மூலம் தொடர்ந்து வெளியிடுவோம். குருவும் நானும் நெருங்கிய நண்பர்கள்,  இரவு 2 மணிக்கு போன் செய்து என்னிடம் கதை சொல்வார், ரொம்ப ஜாலியாக எல்லோருடனும் பழகுவார். சினிமாவில் அவருக்கும் இன்னும் பெரிய இடம் உள்ளது.  கோதண்டம் சார் குருவை முழுதாக நம்பினார்.  வரும் 25 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். சோனியா அகர்வால் மேடம் ரசிகன் நான். அவர் சூப்பராக நடித்துள்ளார்.  அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் உதயா பேசுகையில், “இயக்குநர் குரு எனக்கு நீண்ட கால நண்பர். தரமான படமெடுத்து விட்டு உங்களை அழைப்பேன் என்றார். அவர் எடுக்கும் எல்லா படமும் தரமான படம் தான். நல்ல படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். என் தம்பி குருவுக்கு இப்பட வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சோனியாவுக்கு நானும் ரசிகன். அவர் இப்படி ஒரு கேரக்டர் நடித்திருப்பது அருமை. படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் திலீஷ் பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். எனக்கு வாய்ப்பு தந்த அப்பாவுக்கு நன்றி. எல்லோரும் ஒரு குடும்பமாக தான் வேலை பார்த்தோம். பருத்தி மிக  அழகான படமாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா பேசுகையில், “பருத்தி என்றால் பூ. நண்பர் குருவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனை தரட்டும், சோனியா மேடம் இப்படத்தின் மையமாக இருக்கிறார். அவர் விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. என் படத்தில் யோகிபாபு நடித்து விட்டு விழாவிற்கு வரவில்லை, அதைப்பற்றி பேசியது பிர்ச்சனை ஆனது. இதை தயாரிப்பாளர் சங்கம் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இசையமைப்பாளர் வரவில்லை என்பது வருத்தம், அவர் சொந்த படத்திற்கு வரமால் இருக்கக் கூடாது. படத்தின் பாடல்கள் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் திருமலை பேசுகையில், “சிறு படங்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு தர வேண்டும். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர் இமயம் பாரதிராஜா அவருடைய உதவியாளர் குரு இயக்கியுள்ள படைப்பு  பருத்தி. டிரெய்லர் பார்க்கும் போதே அதில் உள்ள எதார்த்தம் தெரிகிறது. சோனியா மேடம் நடிப்பு அருமையாக உள்ளது. குரு இந்தப்படத்தை எடுத்து இங்கு கொண்டு வர அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் படம் எடுக்கவில்லை என்றால் தமிழ் சினிமா அழிந்துவிடும். அந்த தயாரிப்பாளர்களின் முயற்சியால் தான் இந்த தமிழ் சினிமா இயங்கி வருகிறது.  திரையரங்கு வைப்பது தான் இன்று சட்டமாக உள்ளது. சின்ன படத்தை வெளியிடுவதில் அத்தனை பிரச்சனை உள்ளது. சினிமா  தயாரிப்பாளர்கள் இயக்குநர்களிடையே ஒரு கட்டுக்கோப்பு இல்லை. இதை தட்டிக்கேட்க ஆளில்லை. இது மாற வேண்டும். வெறும் பத்து பேர் வாழ சினிமா இயங்கி வருகிறது. படம் ரைட்ஸ் விற்கவில்லை ஆனால் ஆன்லைனில் வந்துவிடுகிறது. கோடிகளை போடும் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு வேண்டும். விரைவில் மாற்றம் வரும். இப்படம் ஜெயிக்க வாழ்த்துகள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் ரிஷி பேசுகையில்,  “பருத்தி மிக அழகான படம். சோனியா மேடமை நாம் அழகாக பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் கிராமத்தில் வாழும் ஒரு அம்மாவாக அருமையாக நடித்துள்ளார். இயக்குநர் குரு மிகத்திறமையானவர். நல்ல நடிகர், எல்லா காட்சியையும் அவரே நடித்து காட்டி விடுவார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். நாயகன் புதிதாக நடித்தாலும் அட்டகாசமாக நடித்துள்ளார். நாயகி தமிழ் தெரியவில்லை என்றாலும் அருமையாக நடித்துள்ளார். பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்துள்ளது இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி.” என்றார்.

 

நடிகை சோனியா அகர்வால் பேசுகையில், “பருத்தி எனக்கு மிக வித்தியாசமான அனுபவம். டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். நான் இயக்குநரிடம் இங்கு இருந்து யாரையாவது நடிக்க வைக்கலாமே எனக் கேட்டேன் ஆனால் உங்களுடைய அனுபவமும் நடிப்பும் இந்தப் படத்திற்கு வேண்டும் என்றார்.  அவர் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார். 

 

பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் K பாரதி அவர்களை வைத்து, வளையல் என்ற திரைப்படத்தை இயக்கிய  குரு A அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். 

 

திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 

கிராமத்து வாழ்வியலையும் உணர்வு போராட்டத்தையும், இத்திரைப்படத்தில் கொண்டுவந்துள்ளார் . சமூக சிக்கல்களில் சிக்கி தவித்து பால்ய பருவத்தை கடக்கும் சிறார்களின் மனநிலையை யாதார்த்தத்துடனும் மிகவும் உணர்வு பூர்வமாக கிராமத்திலிருந்து வாசம் மாறாமல் இயக்குநர் எடுத்து வந்திருக்கிறார். 

 

இப்படத்திற்கு ரஞ்சித் வாசுதேவன் இசையமைத்துள்ளார்.  ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

இத்திரைப்படம் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஓசூர் தேன் கனி கோட்டாவில் நடைபெற்றுள்ளது வரும் டிசம்பர் 25  திரைக்கு கொண்டுவர  திட்டமிடப்பட்டுள்ளது.

Related News

10826

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

’ஃப்ரேம் & ஃபேம்’ தலைப்பில் திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் டூரிங் டாக்கீஸ்!
Wednesday December-17 2025

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...

Recent Gallery