கடந்த சில மாதங்களாகவே கோடம்பாக்கத்தில் ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பெயர் ரொம்ப சத்தமாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. பல ஸ்டார்களை பார்த்த கோடம்பாக்கத்திற்குள் புதிதாக எண்ட்ரியாகியிருக்கும் இந்த பப்ளிக் ஸ்டார், தனது முதல் படமான ‘தப்பாட்டம்’ படத்தின் ரிலீஸிற்கு பிறகு, ‘களியாட்டம்’, ‘களிறு’, ‘நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி’ என சுமார் 8 க்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்துவிட்டார்.
சினிமாவுக்கான அனைத்து விஷயங்களையும் முறையாக கற்றுக்கொண்ட இவர், அப்படி இப்படின்னு இருக்குற படங்களில் ஹீரோவாக நடிக்கிறதை விட, முன்னணி ஹீரோக்கள் படங்களில், எந்த வேடமாக இருந்தாலும், அதில் நடித்து தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும், என்பதில் தீவிரமாக இருக்கிறார். இதை ஏற்கனவே நம் தளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இப்போது செய்தி அதுவல்ல.
கடந்த சில மாதங்களில் தமிழக மக்களை அடிமையாக வைத்திருந்த டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ், விரைவில் தனது இரண்டாம் சீசனை தொடங்க இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்வதில் ஈடுபாடு காட்டி வரும் அந்த தொலைக்காட்சி, பப்ளிக் ஸ்டார் துரை சுதாகாரையும் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...