Latest News :

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Tuesday December-23 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில் ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி அறிமுக கூட்டம்  22-12-2025 அன்று ஹோட்டல் ராதா பார்க் இன்னில் மாலை 6.00 மணியளவில் தொடங்கி நடைப்பெற்றது. இக் கூட்டதிற்கு சிறப்பு விருந்தினர்களாக கலைபுலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பேராசிரியர்ஏ.எஸ்.பிரகாசம், வி.சி.குகநாதன், இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

இந்த நிகழ்ச்சியில், தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி சார்பில் போட்டியிடும் தலைவர் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், இயக்குநர்கள் லிங்குசாமி, சரண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

 

தலைவர் பதவிக்கு ஜி.எம்.தமிழ்குமரன் போட்டியிடுகிறார். துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரு.எஸ்.கமலக்கண்ணன் போட்டியிடுகிறார்கள். 

 

செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் கமீலா நாசர் போட்டியிட,  பொருளாளர் பதவிக்கு என்.சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிடுகிறார்.

 

இணைச் செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயக்குமார் போட்டியிடுகிறார்.

 

மூத்த தயாரிப்பாளர்களான அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், எச்.முரளி, எம்.கபார், ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து சாலை சகாதேவன், பைஜா டாம், எஸ்.ஜோதி, வி.பழனிவேல், கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் ஏ.முருகன், ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், கே.முருகன், .வி.ஞானவேல், பிரவின்காந்த், வி.என்.ரஞ்சித் குமார், எஸ்.ஜெயசீலன், ராஜா @ பக்ருதீன் அலி அகமத், எம்.தனசண்முகமணி, பி.ஜி.பாலாஜி, இசக்கிராஜா, பி.மகேந்திரன், எஸ்.பிரப்தீஸ் சாம்ஸ், ஏ.ஏழுமலை, எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

 

Thayarippalargalin Nalan Kaakkum Ani

 

வேட்பாளர்களை கலைபுலி எஸ்.தாணு அவர்கள் அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர்கள் வேட்பாளர்களை வாழ்த்தி பேசினார்கள்.

 

ஜி.எம்.தமிழ்குமரன் மற்றும் ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கள் அணி வெற்றி பெற்று நிர்வாகம் அமைந்தால் சங்க உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பேசினார்கள். இக் கூட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டு தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணிக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related News

10834

’பல்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday December-23 2025

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...

படம் வெளியாவதற்கு முன்பே ‘சிறை’ இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
Tuesday December-23 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...

’45’ படம் தனி உலகம்! – நடிகர் சிவராஜ்குமார் கூறிய சுவாரஸ்ய தகவல்
Monday December-22 2025

சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...

Recent Gallery