எதார்த்த நடிகர், தொடர் வெற்றி நாயகன் என்ற பெருமைகளோடு, ஒரு படத்திற்கு பல கோடிகளை சம்பளமாக வாங்கும் விஜய் சேதுபதி, தனியார் நிறுவனம் ஒன்று கஷ்ட்டப்படும் விவசாயிகளுக்கு வழங்கிய நிதியை அபேஷ் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சேமியா நிறுவனம் ஒன்று விஜய் சேதுபதியை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் அந்த நிறுவனத்தின் பொருட்களின் விளம்பரங்களில் விஜய் சேதுபதியை பார்க்கலாம். இதற்கிடையே, கஷ்ட்டப்படும் விவசாயிகளுக்கு உதவி செய்ய நினைத்த அந்த நிறுவனம், அதை விஜய் சேதுபதி மூலமாகவே செய்யலாம் என்ற முடிவுக்கு வந்ததோடு, விளம்பரத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியிடம் பேசப்பட்ட தொகையோடு, விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி ரூ.50 லட்சத்தையும் சேர்த்து அவரது வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, விஷயத்தையும் விஜய் சேதுபதியிடம் சொன்னார்களாம்.
ஆனால், விஜய் சேதுபதியோ நிறுவனம் வழங்கிய அம்புட்டு தொகையும் தனக்கு வேண்டும், விவசாயிகளுக்கு தர முடியாது, என்று கூறிவிட்டாராம். என்னடா வம்பா போச்சு, என்று முழுச்சி அந்நிறுவனத்தின் அதிகாரிகள், இந்த நிகழ்வு குறித்து சென்னையில் நடத்த இருந்த பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தாமல், எப்படியாவது அவரிடம் இருந்து அந்த ரூ.50 லட்சத்தை பெற்று விவசாயிகளிடம் கொடுக்க முயற்சித்து வந்ததாம்.
விடாப்பிடியாக இருந்த விஜய் சேதுபதி, தன்னால் 50 லட்சத்தை கொடுக்க முடியாது, என்று கராராக சொல்லிவிடவே, வேறு வழியில்லாமல் அந்த நிறுவனம், தாங்களே அந்த 50 லட்சத்தை கொடுக்க முன் வந்துள்ளதாம். அடுத்த மாதம் திண்டுக்கல்லில் அந்த தொகையை விஜய் சேதுபதி மூலம், அந்நிறுவனம் கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து இந்த விசஷயத்தை அறிவிக்க இருந்த அந்நிறுவனம், விஜய் சேதுபதி மீது இருக்கும் கடுப்பால், எந்த பிரஸ் மீட்டும் வேண்டாம், நேரடியாக நிகழ்ச்சியை நடத்திவிடும் முடிவுக்கு வந்துவிட்டதாம்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...