Latest News :

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘மாஸ்க்’!
Wednesday December-31 2025

கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்த ‘மாஸ்க்’ திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ஓளிபரப்பாக உள்ளது. அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது.

 

மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய ரகசியங்களுடன் மோதும் போது முற்றிலும் தலைகீழாக மாறுகிறது. விசாரணை தீவிரமடையும் போது, வேலு குற்றத்தின் உண்மையை மட்டுமல்ல, தனது செயல்களின் விலையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.

 

படம் குறித்து நடிகர் கவின் கூறுகையில், “மாஸ்க் ஏற்கனவே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது ZEE5 மூலம் இன்னும் பெரிய ரசிகர்கள் வட்டத்தை அடையப் போவதில் மகிழ்ச்சி. வேலு பல அடுக்குகளைக் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை அதிகமானோர் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

 

இயக்குநர், தயாரிப்பாளர் வெற்றிமாறன் கூறுகையில், “இந்த படம் பேசும் கருக்கள் காலத்தை கடந்தவை. மாஸ்க் இப்போது ZEE5-ல் வெளியாகும் நிலையில், முதன் முறையாக இதை அனுபவிக்கும் புதிய பார்வையாளர்களிடம் சென்று சேரும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி”. என்றார்.

Related News

10844

நான் இங்கு நிற்க விஜயகாந்த் தான் காரணம் - ‘எல்.எஸ்.எஸ்’ பட இயக்குநர் உருக்கம்
Monday February-16 2026

ஜெ.பி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில், ஆர்...

குழந்தைகளின் கற்றலுக்கான ‘கலர் பென்சில்’! - 'கிகி & கொகொ' பட தயாரிப்பாளர்களின் புதிய முயற்சி
Monday February-16 2026

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது...

விவசாயிகளின் உரிமையை பேசும் ’அரிசி’ நிச்சயம் வெல்லும் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Monday February-16 2026

மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி...

Recent Gallery