Latest News :

கண்னன் ரவியின் துபாய் பாந்தர் கிளப்-ஐ திறந்து வைத்த ஷாருக்கான்!
Saturday January-03 2026

துபாயில் கண்ணன் ரவி குழும நிறுவனத்திற்கு சொந்தமான புதிய பிரம்மாண்ட பொழுதுபோக்கு மையமான பாந்தர் கிளப்-ஐ (Panther Club) நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வு, துபாயின் நைட்லைஃப் வரலாற்றில் முக்கியமான தருணமாக மாறி, புத்தாண்டு கொண்டாட்டங்களின் உச்சமாக அமைந்தது.

 

துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group), வணிகம், ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் (Hospitality), பொழுதுபோக்கு மற்றும் லக்ஷரி சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. தரமான சேவை, நவீன அணுகுமுறை மற்றும் சர்வதேச தரத்திலான நிர்வாக முறைகள் ஆகியவற்றின் மூலம், இந்த குழுமம் துபாயின் வளர்ந்து வரும் வணிக சூழலில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் தமிழ் திரையுலகிலும் கால்பதித்து பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது.

 

Marriott Marquis Dubai Creek வளாகத்தில் அமைந்துள்ள Panther Club, கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோரின் முன்னெடுப்பில் உருவாகியுள்ளது. அவர்களது அழைப்பை ஏற்று, நெருங்கிய நண்பரான பாலிவுட் கிங் கான் ஷாருக் கான்  இந்த கிளப்பை திறந்து வைத்தார். அவரது வருகை நிகழ்விற்கு கூடுதல் சிறப்பையும் பெருமையையும் சேர்த்தது.

 

கிங் கான் ஷாருக் கான் வருகை  ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கூட்டிச் சென்றது. கடும் பாதுகாப்பு சூழலில் நடந்த அந்த நிகழ்வில், அவரது எளிமையும் கவர்ச்சியும் ரசிகர்களை மெய்மறக்க செய்தது. இந்த நிகழ்வு, பாந்தர் கிளப் ( Panther Club ) தொடக்க விழாவை துபாயின் நைட்லைஃபில் முக்கியமான தருணமாக மாற்றியது.

 

துபாயின் பிரமாண்ட நைட்லைஃப் கலாச்சாரத்தில் புதிய மைல்கல்லாக உருவெடுத்துள்ளது Panther Club. நவீன வடிவமைப்பு, உலகத் தரத்திலான இசை, ஒளி அமைப்புகள் மற்றும் லக்ஷரி அனுபவத்தை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த கிளப், உயர்தரமான பொழுதுபோக்கை விரும்பும் மக்களுக்கான புதிய அடையாளமாக மாறியுள்ளது.

 

சர்வதேச தரத்திலான சேவை, பாதுகாப்பு, மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, உலகளாவிய பிரபலங்கள் வருகை தரும் அளவிற்கு இந்த இடத்தை உருவாக்கியுள்ளது  கண்ணன் ரவி குழுமம்.

 

துபாயின் வளர்ந்து வரும் வர்த்தக சூழலில், உலகளாவிய தரத்தில் பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கும் நோக்குடன் செயல்படும் கண்ணன் ரவி குழுமம், Panther Club போன்ற திட்டங்களின் மூலம் சர்வதேச அளவில் தனது முத்திரையை பதித்து வருகிறது. இதன் மூலம், கண்ணன் ரவி குழுமம் இன்று துபாயின் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க வணிக அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

 

கண்ணன் ரவி குழுமம், துபாயில் மட்டுமல்லாது, தமிழ் திரையுலகிலும் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தி,  பல புதிய திரைப்படங்களை தயாரித்து வருவதன் மூலம், தமிழ் சினிமா உலகிலும் தனது வலுவான தடத்தை தொடர்ந்து பதித்து வருகிறது.

Related News

10852

இரண்டு உலக சாதனைகளை படைத்த நடிகர் விஜய் விஷ்வாவின் 'விவி என்டர்டைன்மென்ட்ஸ்'
Saturday January-03 2026

விவி எண்டர்டெயின்மெண்ட் (VV Entertainments) நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு many faces one voice - stop violance against her என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது...

ஜீ5-ன் புதிய இணையத் தொடர் ’ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’படப்பிடிப்பு துவங்கியது!
Saturday January-03 2026

ஜீ5 ஓடிடி நிறுவனத்தின் புதிய இணையத் தொடரான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ (Once Upon A Time in Kayamkulam) படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது...

ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் ‘மாயபிம்பம்’!
Saturday January-03 2026

’மாயபிம்பம்’ 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம்...

Recent Gallery