Latest News :

இரண்டு உலக சாதனைகளை படைத்த நடிகர் விஜய் விஷ்வாவின் 'விவி என்டர்டைன்மென்ட்ஸ்'
Saturday January-03 2026

விவி எண்டர்டெயின்மெண்ட் (VV Entertainments) நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு many faces one voice - stop violance against her என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

 

VV எண்டர்டெயின்மெண்ட்ஸ், DARS எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) மற்றும் தி அமெரிக்கன் கல்லூரி இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

 

பெண்கள் மாணவர் நலன் டீன் Dr. வதனா ரூபா வரவேற்புரை வழங்கினார். தி அமெரிக்கன் கல்லூரி முதல்வரும் செயலாளருமான Dr ஜே. பால் ஜெயக்கர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். லேடி டோக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கல்லூரியின் முதல்வரும் செயலாளருமான டாக்டர் ஆர். பியூலா ஜெயஷ்ரீ நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

 

ஏகிஸ் (யூகே) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாகராஜன் சீனிவாசன், மூத்த எலும்பியல் நிபுணர் டாக்டர் ஈ. கலைச்செழியன், உடற்பயிற்சி மற்றும் அழகு சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். சோலு, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பிரேமலதா, ஸ்டார் ஃப்ரெண்ட்ஸ் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி குருசாமி, சமூக நலத்துறை (ஒன் ஸ்டாப் சென்டர்) மூத்த ஆலோசகர் ஜே. சங்கீதா, சமூக செயற்பாட்டாளர் செல்வம் ராமசாமி, MAITSYS நிறுவனத்தின் உலக துணைத் தலைவர் இனேஷ் பாண்டி, உளவியல் ஆலோசகர் டாக்டர் ஆஷா. மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட ஆலோசகர் மேரி கெனெடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் வழிமுறைகள், சட்ட விழிப்புணர்வு மற்றும் சமூக பொறுப்பு குறித்து அவர்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.

 

மாணவிகளுக்காக குங்க்ஃபூ மாஸ்டர் ஷிஜோ சரவணன் தலைமையில் சிறப்பு சுய பாதுகாப்பு பயிற்சி நடத்தப்பட்டது. இது பெண்களின் உடல் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் வகையில் அமைந்தது.

 

இந்த நிகழ்ச்சியில் 1000 மேற்பட்ட மாணவ மாணவிகள், பெண் பணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நலத்துறை பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். பெண்களுக்கு பாதுகாப்பான, வன்முறையற்ற மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

 

இந்த நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பாக, மாணவிகளின் பெருமளவான பங்கேற்புடன் ஒரு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதனை அங்கீகரிக்கும் வகையில், கிராண்ட் யூனிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம், VV எண்டர்டெயின்மெண்ட்ஸ், DARS எண்டர்டெயின்மெண்ட், தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரிக்கு உலக சாதனை சான்றிதழை வழங்கியது. இந்த சான்றிதழை ரோட்டேரியன் டாக்டர் ஆர். தினேஷ்குமார் வழங்கினார்.

 

நிகழ்ச்சியை இலங்கையைச் சேர்ந்த இளமை எஃப்.எம் நிறுவனர் மிருனன் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

 

நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான டாக்டர் விஜய் விஷ்வா நிறுவிய VV எண்டர்டெயின்மெண்ட்ஸ், சமூக பொறுப்புடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட DARS எண்டர்டெயின்மெண்ட, திரைப்பட தயாரிப்பு மற்றும் நிகழ்ச்சி மேலாண்மையில் செயல்பட்டு வருகிறது.

Related News

10857

ஜீ5-ன் புதிய இணையத் தொடர் ’ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’படப்பிடிப்பு துவங்கியது!
Saturday January-03 2026

ஜீ5 ஓடிடி நிறுவனத்தின் புதிய இணையத் தொடரான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ (Once Upon A Time in Kayamkulam) படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது...

ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் ‘மாயபிம்பம்’!
Saturday January-03 2026

’மாயபிம்பம்’ 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம்...

‘திரௌபதி 2’-வில் வில்லனாக மிரட்டும் சிராக் ஜானி!
Saturday January-03 2026

ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது...

Recent Gallery