Latest News :

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘ரூட்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
Sunday January-04 2026

வெரஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ (ROOT – Running Out of Time) படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார். இந்த தருணம் படக்குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது.

 

மேலும், ‘ரூட்’ படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவை பாராட்டியதோடு, படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார்.  இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. 

 

‘ரூட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் சூரியபிரதாப்.எஸ், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘கோச்சடையான்’-ல் துணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக அபார்ஷக்தி குரானா அறிமுகமாகிறார். இவர்களுடன் பாவ்யா திரிகா, ஒய்.ஜி.மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

அறிவியல் , கிரைம் த்ரில்லர் உடன் , ஆழமான உணர்வுகளையும் இணைத்து, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.  சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், தற்போது போஸ்ட் ப்ரோடக்க்ஷன் பணிகளில் இருக்கிறது. 

 

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரன் ரே இசையமைத்திருக்கிறார். ஜான் அபிரகாம் படத்தொகுப்பு செய்ய, ஜகன் நந்தகோபால் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

Related News

10858

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery