Latest News :

உங்கள் ஆதரவு எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது - நடிகை ரக்‌ஷிதா நெகிழ்ச்சி
Monday January-05 2026

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் ‘99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு’.

 

இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.  கதாநாயகிகளாக ரக்‌ஷிதா மகாலட்சுமி,  ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன்,  ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.

 

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்ட அரங்கில், படக்குழுவினருடன், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆளுமைகள், திரை ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

 

மேலும் இவ்விழாவில் மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் ’ஹஸ்கி ஹவுஸ்’ படத்தின் முதல் பார்வை  மற்றும் படத்தின் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. 

 

நிகழ்ச்சியில் கலைப்புலி தாணு  பேசுகையில், “99/66 பிரம்மாண்டமான படைப்பு. இயக்குநர் எந்த நேரத்திலும் வியாபார சிந்தனையுடன் இருப்பதால் தான் இவ்வளவு பெரிய படைப்பு தந்துள்ளார். நான் முதன் முதலில் தயாரிப்பாளராக திகில் படம் தான் ஆரம்பித்தேன், தம்பி மூர்த்தியும் அதைத்தான் செய்துள்ளார். இப்படம் படக்குழுவுக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தரும். மூர்த்திக்கும் அவரது துணைவிக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

வள்ளிநாயகம் பேசுகையில், “தம்பி மூர்த்தி அவர்களின் திரைப்பட சேவை இன்று துவங்கியுள்ளது. பிள்ளையார் வைத்து அழகாக பாடலை எடுத்திள்ளார். உலகமெங்கும் அவர் படம் ஒளிபரப்பாகும், இன்று நாம் சந்திரனுக்கு செல்கிறோமே அந்த  சந்திரனும் சூரியனும் வாழ்த்தி மகிழ்வார்கள்.  இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறட்டும். மூர்த்தி மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். படக்குழு வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், “ஒரே மேடையில் மூன்று விழாவை நடத்துவது இங்கு தான் பார்க்கிறேன். நாயகி ரக்‌ஷிதா ரசிகன் நான். தயாரிப்பாளர் பில்டிங் கட்டுகிற வேலையை விட்டுவிட்டு, சினிமாவுக்குள் வந்து கலக்குகிறார்.  விளம்பர படம் எடுக்க வந்து, இப்போது கதை கேட்டு படம் செய்கிறார். இவர் என்னையும், பேரரசையும் மீண்டும் இயக்க வைக்கிறேன் என சொல்லியிருக்கிறார். அவர் மூன்றாவது படத்திற்கு இங்கேயே பூஜை போட்டுவிட்டார். பாடலும் டிரெய்லரும் அட்டகாசமாக உள்ளது. நடிப்பு ராட்சசி ரக்‌ஷிதா கலக்கியிருக்கிறார். படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

ஞானசம்பந்தம் பேசுகையில், “இந்த விழா அழைப்பிதழே மிக வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பக்கம் கருப்பண்ண சாமி அரிவாளுடன் இருக்க, இன்னொரு பக்கம் புத்தர் முகம் இருக்கிறது. இது எல்லாமும் சேர்ந்து, மிக வித்தியாசமனா படைப்பாக இப்படம் இருக்கும். இயக்குநர் மூர்த்தி மற்றும் படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “ஒரே மேடையில் மூன்று விழா நடத்துவது இங்கு தான் பார்க்கிறேன். தயாரிப்பாளர் தாணுவையே மிஞ்சிவிட்டார் மூர்த்தி வாழ்த்துக்கள். ஆர் வி உதயகுமார் இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்‌ஷிதா ரசிகர் மன்ற தலைவரா எனத் தெரியவில்லை. அந்தளவு தீவிர ரசிகராக இருக்கிறார். ரக்‌ஷிதா எந்த கதாப்பாத்திரம் தந்தாலும் அப்படியே மாறிவிடுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். பேய்ப்படம் என நினைத்தால் பாடல் எல்லாம் பக்திப்படம் போல உள்ளது. பிள்ளையார் பாடல், கருப்பண்ண சாமி பாடல், புத்தர் பாடல் எல்லாம் பயங்கர என்ர்ஜியாக உள்ளது. அமைதிக்கான கடவுள் புத்தர் அவர் பற்றி தமிழ் சினிமாவில் வரவில்லை. இப்படத்தில் வந்துள்ளது மகிழ்ச்சி. மூர்த்தி அவர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் இப்படம் பெரிய வெற்றி பெறட்டும். நன்றி.” என்றார்.

 

இயக்குநர் அகத்தியன் பேசுகையில், “டிரெய்லர் பார்த்தேன் மிக நன்றாக இருந்தது. இங்கு படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் தனித்தனியாக புரமோ ஒளிபரப்பியது மகிழ்ச்சியாக இருந்தது. எந்த புதுப்படத்திலும் அதை செய்ய மாட்டார்கள். இயக்குநர், தயாரிப்பாளர் மூர்த்திக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

9966

 

நடிகை ரக்‌ஷிதா பேசுகையில், “உங்கள் ஆதரவு எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லோரும் என் ரசிகர் மன்ற தலைவர் என சொல்லிக்கொள்வது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்கு ஷீட்டிங்கின் போது சின்னப்படம் என நினைத்தேன் இங்கு விழா பிரம்மாண்டமாக நடப்பதைப் பார்த்தால் மிகப்பெரிய படமாக தெரிகிறது. மூர்த்தி சார் எல்லோரையும் மிக நன்றாக பார்த்துக் கொள்வார். புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விசயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். பட ஷீட்டிங் மிக ஜாலியாக இருக்கும். மூர்த்தி சார் மிக நன்றாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் தயாரிப்பாளர் மூர்த்தி பேசுகையில், “நான் சினிமாவுக்கு புதியவன் எனக்கு தெரிந்ததை என் அறிவை வைத்து, மிக எளிமையாக இப்படத்தை எடுத்துள்ளேன். படம் பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ” என்றார்.

 

அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும், சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படக்குழு படமாக்கியுள்ளது. மற்றும் படத்தில் AI-CG காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர்.

பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார். மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ், தயாரிப்பு நிறுவனம் - மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.

Related News

10861

கண்ணன் ரவி குழுமத்தின் ‘பாந்தர்ஸ் ஹப்’ & ’ஐந்திணை உணவகம்’ திறப்பு விழாவில் பங்கேற்ற ஷாருக்கான்
Monday January-05 2026

தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான கண்ணன் ரவி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்டமான மாநகரமான துபாயை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் கண்ணன் ரவி குழுமம் - துபாய்க்கு வருகை தரும் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள்-  சுற்றுலா பயணிகள்-  விருந்தினர்கள்-  நண்பர்கள்- ஆகியோரின் வணிக ரீதியிலான மற்றும் நட்பு ரீதியிலான சந்திப்புகளை மறக்க முடியாத இனிமையான நிகழ்வுகளாக மாற்றி அமைக்கும் வகையில் பிரத்யேக நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் 'பாந்தர்ஸ் ஹப் ' ( Panthers Hub) எனும் பொழுதுபோக்கு மையம்- ATK 2‌ ஐந்திணை‌ உணவகம் ஆகியவற்றை நேர்த்தியான கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர்...

முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாக பொங்கலுக்கு வெளியாகும் ‘ராட்ட’!
Monday January-05 2026

2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...

’திரெளபதி 2’ மூலம் மக்கள் அறியாத வரலாற்றை பேசியிருக்கிறேன் - இயக்குநர் மோகன் ஜி
Monday January-05 2026

’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...

Recent Gallery